பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 143

உண்மையைத் தாம் பெற்ற கல்வியால் அறிந்திருத்தல் வேண்டும் இவர்கள்.

ஆனால், அதனை அறியாது இருத்தல் மட்டும் அன்று. அதன் எதிராகத் தம்முடைய சத்தியை நன்கு அறிந்து பிறருக்குத் தீமை விளைவிக்க அந்தச் சத்தியைப் பெரிதும் பயன்படுத்துவர். தாங்கள் வாய் திறந்து கூறினால் அது பலித்துவிடுகின்றது என்பதை அறிந்த இவர்கள் வேண்டு மென்றே இவ்வாறு கூறிப் பிறருக்குத் தீமை புரிகின்றார்கள். திருவள்ளுவர் காலத்திலும் இத்தகைய ‘பெரியவர்கள்’ இருந்திருப்பார்கள் போலும்! எனவே, அவர் இத்தகைய புண்ணியவான்களுடன் பகை கொள்ள வேண்டா என்று கூறுகிறார்.

பல்லவப் பேரரசர்களுக்குள் மிக்க தமிழ்ப்பற்றும், தமிழறிவும் உடையவன் ‘தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன்’ என்பவன். சரித்திரப் பிரசித்தி பெற்றதாகிய தொள்ளாற்றில் நடைபெற்ற போரில் வாகை சூடிப் பல்லவப் பேரரசை அதன் இறுதிக் காலத்தில் மீட்டும் தழைக்கச் செய்த பெருமை இவனுடையது ஆகும். என்றாலும் இப்பெருமகன் சிறந்த தமிழ்க் கவிதையை அனுபவிப்பதில் எல்லை மீறிய பற்று உடையவனாய் இருந்தான். எந்த ஒன்றிலுமே பற்று எல்லை மீறி விட்டால், அது சிறந்த தமிழ்ப் பற்றாகவே இருப்பினுங் கூடத் தீமையே செய்யும் என்ற உண்மையை மன்னன் மறந்து விட்டான்.

நந்திவர்மன் தந்தைக்கு ஒரு காதற்கிழத்தி உண்டு என்றும், அவள் மூலம் மற்றொரு மகன் தோன்றினான் என்றும் செவி வழிக் கதை பேசுகிறது. காதற்கிழத்தி மகனாதலால் அந்த இளையவன் அரசுத் திருவைப் பெறுதற்குரிய தகுதியற்றவன் ஆகிவிட்டான். என்றாலும் என்ன? ஆசை யாரையும் விடுவது இல்லை அன்றோ? நந்திவர்மன் தம்பியும் இதற்கு எங்ங்ணம் விலக்காக,