பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 145

யார்மேல் அந்தப் பாடல்கள் இயற்றப்பட்டுள்ளனவோ அவர்கள் அந்தப் பாடல்களைக் கேட்குமாறு செய்ய வேண்டும். பாடல்களைக் கேட்ட அவர்கள், கேட்டு முடிந்தவுடன் இறந்துவிடுவார்கள். இவ்வாறு ஒருவரைக் கொல்லும் நோக்கத்துடன் பாடப்படும் பாடல்களை அரம் வைத்துப் பாடுதல் அல்லது அரம் பாடுதல் என்று கூறுவார்கள்.

தெள்ளாற்றெறிந்த நந்தியின் கவிதை ஆர்வத்தை வழியாகக் கொண்டு அவனைக் கொல்ல முடிவு செய்து விட்டான் இளநந்தி, உடனே ஒரு புலவனைப் பிடித்து, *நந்திக் கலம்பகம்’ என்ற சுவை பொருந்திய நூல் ஒன்றைப் பாடுமாறு செய்தான். தன்னுடைய காதற் பரத்தை ஒருத்திக்கு இவ்வழகிய பாடல்களுள் சில வற்றைக் கற்றுக் கொடுத்துப் பாடுமாறு செய்தான். ஒரு நாள் இரவு நகர் சோதனைக்கு மாறுவேடத்துடன் வந்த தெள்ளாற்றெறிந்த நந்தி, இப்பாடல்களைக் கேட்க நேரிட்டது. பாட்டின் சுவையில் தன்னை மறந்த நந்தி மறுநாள் அவளை அழைத்து ஏனைய பாடல்களையும் பாடுமாறு ஏவினான். ५

அப்பாடல்கள் தோன்றிய வரலாற்றை எடுத்துக் கூறி, அவள், அவன் எதிரே ஏனைய பாடல்களைப பாட மறுத்துவிட்டாள். மன்னன் விட்ட பாடு இல்லை: தம்பியை அழைத்து எவ்வாறாயினும் மீதிப் பாடல்களைப் பாடவேண்டும் என்று வற்புறுத்தினான்.

அவன் ஆணையின் வண்ணம் அரண்மனையிலிருந்து இடுகாடு வரையில் நூறு பச்சை மட்டைப் பந்தல்கள் போடப்பட்டன. ஒவ்வொரு பந்தலின் அடியிலும் அரசன் நின்று ஒரு பாடலைக் கேட்டான். உடனே அப்பச்சை மட்டைப் பந்தல் தீப்பற்றி எரிந்தது. என்றாலும், மனம் தளராத மன்னன் இறுதிவரையில் தமிழ்க் கவிதையை அனுபவித்து உயிரையும் விடச்

கு.- 10