பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 155

ஆராய்ந்து, அவற்றுள் எது மிகுதியாக இருக்கிறதோ அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பேசுகிறது.

இந்த முறையில் ஆராய்ந்தால் எந்த ஒருவரையும் முழுவதும் நல்லவர் என்றோ, தீயவர் என்றோ கூறிவிட முடியாது. எவ்வளவு நல்லவரிடமும் ஒரு சில தீய பண்புகள் இருக்கலாம்; எத்துணைத் தீயவரிடமும் ஒரு சில நற்பண்புகள் இருக்கலாம். எனவே, ஒருவரை நல்லவர், தீயவர் என்று முடிவு கூறு முன்னர் இக்குறளின்படி ஆராய்ந்து, எது மிகுதியாக உள்ளதோ அதைக்கொண்டே முடிவு செய்ய வேண்டும்.

மனிதர்களிடம் உள்ள இப்பண்பாட்டை நன்கு அறிந்து கொண்டால் அனைவரிடமும் நன்கு பழக முடியும். எத்துணைக் கருத்து வேறுபாடு உடையவர் களிடமுங்கூட நன்கு பழக முடியும். உலகில் எவரையும் பகைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. பிறரைப் பகைக்காமல் அன்பு செய்யும் பண்பாடு யாரிடம் எவ்வாறு ஏற்படும்? உலகில் உள்ள மக்கள் அனைவரும் குறைவு நிறைவு என்ற இரண்டுங் கலந்தவர்கள்தாம் என்ற உண்மையை அறிந்து விடுதல் மட்டும் போதாது. அவ்வாறு அறியப் பட்டவுடன் தீயவர்களிடம் வெறுப்புத் தோன்றுவது இயல்புதான். வெறுப்புத் தோன்றாமல் அவர்களையும் மன்னிக்கும் இயல்பு கிடைத்தற்கரிய ஒன்று.

மன்னிப்பதோடு நின்று விடாமல், அவன் அறியாமல் செய்கிறான் என்று உணர்ந்து அவனிடம் அன்பு செய்ய வேண்டுமாயின், அது மனிதர்களுள் சிறந்த மகாத்துமாக் களுக்கே முடியும். இப்பண்பைப் பெற, நிறைந்த அளவு மனோதிடம் வேண்டும். மனோதிடம் எப்பொழுது கிடைக்கும்? அச்சம் என்பதை முற்றிலும் மனத்திலிருந்தே அகற்றி விட்டால் அப்பொழுது அந்த மனோதிடம் கிட்டும். அச்சத்தை எப்பொழுது அகற்ற முடியும்: