பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 O அ. ச. ஞானசம்பந்தன்

களின் கூந்தல் செயற்கையால் மணமடைகின்றதே தவிர, இயற்கை மனமுடையதன்று, என்று கூறினான். வந்த புலவன், தெய்வ மகளிரின் கூந்தல் எத்தகையது?’ என்று கேட்டான். ஆராயாத நக்கீரன், அவர்கள் கூந்தலும் அத்தகையதுதான்!’ என்று கூறிவிட்டான். மூன்றாவதாக ‘நீ வழிபடும் ஞானப் பூங்கோதையின் கூந்தல் எத்தகையது?’ என்று வினவினான் வந்த புலவன். நுனிக் கொம்பு வரை ஏறிவிட்ட நக்கீரன், நிறுத்திக் கொள்ள வேண்டிய எல்லையை மறந்து விட்டான்; அகங்கார மிகுதியால் கேள்வியைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை. ‘ஞானப் பூங்கோதையின் கூந்தலும் செயற்கை மணமுடை யதுதான்!” என்று விடை கூறினான். ஞானப் பூங்கோதை, என்ற சொல்லின் பொருளை, அதாவது ஞானமாகிய கூந்தல் என்பதைக்கூட மறந்து விட்டான் நக்கீரன்.

அவன் கண்ணால் கண்ட உலகப் பெண்களின் கூந்தலைப் பற்றிச் செயற்கை மணமுடையது என்று கூறுவது ஒருவேளை பொருத்தமுடையதாக இருக்கலாம். ஆனால், கண் காணாத தேவ மகளிரைப் பற்றிப் பேசியது பொருத்தமற்றது. அதைவிடக் கேவலமானது, ஞானப் பூங்கோதை என்ற சொல்லின் பொருளைக் கூடத் தெரிந்து. கொள்ளாமல் அதுவும் செயற்கை மணமுடையது என்று கூறியது. எனவே, அகந்தை காரணமாக நுனி மரம் வரையில் ஏறிவிட்ட நக்கீரன், எங்கே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அறியாமல், உயிருக்கு இறுதியைத். தேடிக் கொண்டான். நம்மில் பலரும் செய்கின்ற இத் தவற்றையே குற்ள்,

‘ நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்,

உயிர்க்கு இறுதி ஆகி விடும்’ என்று கூறுகிறது.

இங்ங்னம் வாழக் கூடாது என்று குறள் கூறி யிருப்பவும், நக்கீரன், நெப்போலியன், ஹிட்லர் ஆகியோர் இவ்வாழ்க்கையை மேற்கொண்டு குறள் கூறிய பயனையே. அடைந்தனர்.