பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. வேண்டாமை !


ந்தப் பரந்த உலகில் யாரைக் கேட்டாலும் வேண்டும் என்று சொல்கிறவரே பலராவர். 'எது வேண்டும்?’ என்று மீண்டும் கேட்டால் ஒரு கண நேரம் விழித்துவிட்டு, 'எதுவானாலும் சரி, வேண்டும்,’ என்று தான் கூறுவர். ஆறு மாதக் குழந்தையைத்தான் எடுத்துக் கொள்ளுங்கள். அழகிய நிறமுடைய ஒரு பொருளை அக் குழந்தையிடம் காட்டிப் பாருங்கள். அந்தப் பொருளால் தனக்கு ஏதேனும் பயன் உண்டா, இல்லையா என்பது பற்றிக் குழந்தை கவலைப்படுவதில்லை. பயன் உடையதானாலும் இல்லாததானாலும் அதைப் பெற்று வைத்துக் கொள்ளவே குழந்தை ஆசைப்படுகிறது; கையை நீட்டிப் பெறப் பார்க்கிறது; கிடைக்கவில்லையானால், அழுது அடம் பிடித்து எப்படியாவது பெற முயல்கின்றது.

இன்று குழந்தைகளாக இருப்பவர் நாளைப் பெரியவர்களாகின்றனர். பெரியவர்களாகும்பொழுது, குழந்தைப் பருவத்தில் காணப்பெற்ற பல இயல்புகள் மறைந்து விடுகின்றன; ஆனால் சில இயல்புகள் மறைவதில்லை. அங்ஙணம் மறையாமல் கடைசிவரை ஒட்டிக் கொண்டிருக்கும் பண்புகளில் ஒன்றுதான் 'வேண்டும்’ என்னும் பண்பு. எதைக் கண்டாலும் வேண்டும் என்று நினைக்கும் இயல்பு. எக்காலத்திலும், எல்லா நாட்டிலும்,