பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 O அ. ச. ஞானசம்பந்தன்


தெரியுமா? ஆண்டவன் அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு ஓடி வருகிறான்.

ஏயர்கோன் கலிக்காமர் என்ற ஒரு பெரியார் சுந்தர மூர்த்தி சுவாமிகள் காலத்தில் வாழ்ந்தார். சிவபெருமானிடம் மிகவும் அன்பு பூண்ட தொண்டர் அவர். பரவையின் சினத்தைத் தணிக்கவேண்டித் தியாகேசனைச் சுந்தரர் தூதாக அனுப்பினார் என்ற செய்தியைக் கேள்விப் பட்டார் ஏயர்கோன். பெருங்கோபம் மூண்டுவிட்டது அவருக்கு. நாம் இறைவனுடைய அடிமைகள். எசமானை, அடிமை, வேலையில் ஏவலாமா? எசமான் அன்புடையவனாக இருந்து, அடிமைக்கு எதுவும் செய்யச் சித்தமாக இருக்கலாம். அதற்காக அடிமையாய் உள்ளவன் நெஞ்சு உரத்துடன் எசமானை வேலையில் ஏவலாமா? இவ்வாறு ஏவின சுந்தரமூர்த்தியை, யான் நேரே கண்டால் அவனை என்ன செய்யப் போகிறேனோ!' என்று அவர் மனம் பொருமினார்.

இத்தகைய உறுதியுடைய ஒருவரை இறைவன் என்ன செய்ய முடியும்? தீராத வயிற்று வலியைத் தந்தான் ஏயர்கோனுக்கு மருத்துவர் தீர்க்கும் நோயல்லவே அது! பொறுக்க முடியாத அத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு ஏயர்கோன் படுத்திருந்தார். இறைவன் அவருடைய கனவில் தோன்றினான். "அன்பனே, உனக்கு வந்திருக்கும் வயிற்று நோயைப் போக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழிதான் உண்டு. சுந்தரமூர்த்தி வந்து இதனைப் போக்கினால் ஒழிய மற்றவர் யாரும் இதனைப் போக்க முடியாது!” என்று கூறிவிட்டான்.

ஏயர்கோனைப் பொறுத்தமட்டில் சுந்தரமூர்த்தியைத் தம் பகைவராகவே கருதிவிட்டார். அது சரியா தவறா என்பது கேள்வி அன்று. அங்ஙணம் கருதிய அவர், சமயம் நேர்ந்த பொழுது என்ன செய்யப் போகிறார் என்பது தான் வினா! ஆண்டவனே வந்து ஒன்றைக் கூறும்