பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 23


இடுகின்றது. சொல்லைச் சொல்ல வேண்டுமானால் எப்படிப்பட்ட சொல்லைச் சொல்வது? மற்றொரு சொல்லைச் சொல்லி இதனை வெல்ல முடியாதபடி சொல்லுக சொல்லை,' என்னும் கருத்தில்,

சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து’

என்று கட்டளையிடுகிறது.

கற்புக் கடம் பூண்ட கண்ணகித் தெய்வம், கற்பு நெறியில் மட்டும் அல்லாமல், 'வெல்லும் சொல்' சொல்வதிலும் குறள் கண்ட வாழ்வையே மேற்கொண்டது என்று கூறுவதில் தவறு யாது?