பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு 0 33


இல்லை. மாலைக் காலம் வந்து விட்டது பகைவனைப். போல உடல் நடுக்கம் அதிகப்படத் துடிதுடிக்கும் அடியாருக்குப் பெருந்தீமை செய்துவிட்டேன்! என் தொண்டு என்ன ஆவது!” என்று துடித்துவிட்டார் ஏகாவியார் .

ஓவாதே பொழியும் மழை ஒருகால் விட்டு ஒழியும் எனக்
காவாலி திருத்தொண்டர் தனிநின்றார்; விடக் காணார்;
மேவார்போல் கங்குல் வர 'மெய்குளிரும் விழுத்தவர்பால்
ஆ! ஆ! என் குற்றேவல் அழிந்தவா!’ என விழுந்தார்"

அடியாரிடம் துணியை வாங்கும்பொழுது வானம் வெளுத்துதான் இருந்தது. ஆனால், எதிர்பாராதபடி மழை வந்துவிட்டால், அதற்கு ஏகாலியார் எவ்வாறு பொறுப்பாக முடியும்? நம்முடைய அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட மழையால் வரும் குற்றத்திற்கு நாம் எவ்வாறு பொறுப்பாவது? இவ்வாறுதான் நாம் எண்ணுவோம்; நாம் இவ்வாறு எண்ணுவதிலும் தவறு இல்லை. ஆனால், பெரியவர்கள் இவ்வாறு எண்ணுவதில்லை, அதனால்தானே அவர்கள் 'பெரியவர்கள்’ என்று வழங்கப் படுகின்றார்கள்? மழையின்மேல் பழியைப் போட்டு விட்டுத் தம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் எண்ணமே தோன்றவில்லை திருக்குறிப்புத்தொண்டருக்கு. மாலை யாவதன் முன் எப்படியும் துணியைத் துவைத்து உலர்த்தித் தந்திருக்க வேண்டியது தம்முடைய கடமை என்றே கருதினார். அக்கடமையிலிருந்து தவறிவிட்டது. பெருங்குற்றம் என்றும் நினைத்தார்

அப்படியே தவறியதாகக் கொண்டாலும் இது ஒரு பெரிய குற்றமா? இல்லையே! ஒர் இரவு துணி இல்லாமையால் பெரியவர் இறந்தா போகப் போகிறார்? என்றாலும் குறள் என்ன கூறுகின்றது? தினை அளவு (கடுகைவிடச் சிறியது தினை) குற்றம் தம்மிடம் நிகழ்ந்தாலும் அக் குற்றத்தைப் பனையளவு பெரிதாகக் கருதி, அஞ்சி கு- 3