பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 O அ. ச. ஞானசம்பந்தன்


எவ்வாறு? 'நீல மணி மிடற்று ஒருவன்போல மன்னுக பெரும நீயே!' என்று அவர் கூறும் பொழுது நீலகண்ட னாகிய சிவபெருமானையும் அதியனையும் ஒப்பிடு கின்றார்.

மிகச் சிறிய சிற்றரசனாயினும், குறள் கண்ட வாழ்வை வாழ்ந்தவன் ஆதலின், அதியனுடைய வாழ்வு அப்படியே ஒரு குறளுக்கு இலக்கியமாய் அமைந்து விடுகின்றது. அனைவரும் அறிந்த குறள்தான் அது:

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

அன்புடையார் தம் எலும்பையும் பிறர்க்கு வழங்குவர் என்ற குறளை வாழ்ந்து காட்டினான் அதியன், அமிழ்தமாகிய நெல்லிக் கனியைப் பிறருக்குக் கொடுத்து விட்டதன் மூலம்.