பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
9. இதுதான் நட்பு !


‘என்ன ஐயா! உங்கள் நண்பரைச் சில நாளாகக் காணவில்லையே? இந்த முறையில் கேள்வி கேட்பவர் பலர். ஒரு சிலர் நண்பரா? என் நண்பரா? யாரைச் சொல்கின்றீர்கள்?’ என்று எதிர் வினா எழுப்புவர். இன்னார் என்று குறிப்பிடுகின்றார் கேள்வியை முதலில் கேட்டவர். அதன் பிறகு இரண்டாமவர் கூறுவதைக் கேட்டால் வியப்பாக இருக்கும். அவரையா கூறு கின்றீர்கள்? நண்பராவது மண்ணாங்கட்டியாவது! பைசாவுக்குப் பிரயோசனமில்லாத ஆள் அவர்! சமயத்தில் உதவாத அவரை நண்பர் என்று எவ்வாறு கூறுவது? என்று சிலர் கூறுவர்.

இம்மாதிரி விடைகளிலிருந்து தெரிந்து கொள்ளும் உண்மை ஒன்று உண்டு. நண்பர் என்பவர், பைசா (நயாபைசா) கொடுத்து உதவ வேண்டும் என்றும், சமயத்தில் உதவ வேண்டும் என்றும் உலகம் எதிர்பார்க் கின்றது. மிகவும் நெருங்கிப் பழகும் இருவர்கூட இம் மாதிரி சோதனை ஏற்படும் பொழுது பிரிந்து விடக் காண்கின்றோம். இது சரியா? முற்றிலும் சரி என்று கூறிவிட முடியாது. சரியன்று என்றும் கூற முடியாது. உண்மை நண்பர் யார்? வேண்டும்பொழுது பைசாக் கொடுத்தும் ஏனைய உதவிகள் செய்தும் உறுதுணையாக இருப்பவர்கள்தாம். நண்பர்களுக்கு இலக்கணம் கூற