பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 59


அடியார்கள் புடைசூழ இப்பொழுது சித்தவட மடத்தில் தங்கியுள்ளார். உதைபட்டவராகிய அவர் நல்ல இளமை யுடையவர். ஆனால், உதைத்தவரோ, தொண்டு கிழவர்! உதைத்ததும் ஒரு முறையன்று; பல முறையாகும். இந் நிலையில் நம்பியாரூரர் அந்தக் கிழவரை அடித்திருந்தாற் கூட தாம் தவறு என்று சொல்வதற்கு இல்லை. ஆனால், நிறைந்த நுண்மையான கேள்வி ஞானத்தை நிரம்ப உடையவராகிய சுந்தரமூர்த்தி, ஐயா, இங்கு இப்படிப் பல முறையும் என்னை மிதித்த நீர் யார்?’ என்றுதான் கேட்டாராம்.

எங்கே சென்று படுத்தாலும் அங்கேயெல்லாம் காலை நீட்டிய ஒரு மனிதனை இன்னான் என்று தெரிந்துகொள்ள விரும்பினாரே தவிர, சுந்தரமூர்த்திக்கு ஒரு சிறிதும் கோபம் வரவில்லை. கோபம் இல்லாவிட்டாற்கூட வார்த்தையிலாவது கோபம் தொனிக்குமாறு 'நீ யார்?' என்று கேட்டிருக்கலாமே! அது கூட இல்லையாம்!

‘என்னைப் பல காலம் மிதித்த நீர் யார்?’ என்ற கேள்வி எவ்வளவு வணக்கத்துடன் வெளி வருகிறது! இவ்வாறு வணக்கமான முறையில் பேசும் இயல்பைச் சுந்தமூர்த்திகள் எங்ங்னம் பெற்றார்? ஒரு சிறிதும் சினம் கொள்ளாமல் மிக வணக்கமான முறையில் பேசுவதற்கு யாரால் முடியும்? 'மிக நுணுக்கமான கேள்வி ஞானத்தை உடையவர்களை அல்லாமல் பிறர் வணக்கமான வாயினை உடையவர் ஆதல் அரிது,' என்ற பொருளில் குறள் பாடுகிறது.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது“

ஏனென்றால், நுணுக்கமான கேள்வி ஞானத்தை உடையவர் தம்முடைய சிறுமையையும், மற்றவர்கள்