பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறள் கண்ட வாழ்வு


1. எது சால்பு ?


நல்ல குணங்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு பெயரால் கூற முடியுமா? நம்மவர்கள் முற்காலத்தில் ‘சால்பு' என்ற சொல்லை இப்பொருளில் வழங்கினர். இந்நாடு முழுவதும்- ஏன்- உலகத்தார் அனைவருமே ஒரளவு ஏற்றுக்கொள்ளக் கூடிய முறையிலும் அறத்தைச் சுருக்கிக் கூறிய பெருமை, திருவள்ளுவருக்கே உரியது. இதை நன்குணர்ந்த பாரதியார் 'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று கூறிப்போனார்.

உலகின் பல பாகங்களில் அவ்வப்பொழுது அற நூல்கள் தோன்றியதுண்டு. திருக்குறளும் அப்படி ஒரு நூல்தானே? இதற்கென்று தனி மதிப்பு ஏன்? ஏனைய அற நூல்கள், தம் சட்டங்களை மக்கள் எவ்வளவு தூரம் பின்பற்ற முடியும் என்பதுபற்றி அதிகம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், திருக்குறள் மக்களின் பின்பற்றும் சக்தியை அடிப்படையில் கொண்டே எழுதப் பெற்றுள்ளது. பெரும்பாலும் அதில் கூறப்பெற்றுள்ள