பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. செயற்கு அருஞ்செயல்

‘என்ன? சமீபத்தில் சாத்தனாரைப் பார்த்தீர்களா?' என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். 'அவரையா? ஏதோ பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதைப் போல மண்டைக் கர்வம் பிடித்து அலைகிறார் அந்த மனுஷர்! அவருக்கு நம்மை எல்லாம் கண்டாற்கூடக் கண் தெரிவ. தில்லை இப்பொழுது!’ என்கிறார் அடுத்தவர். இப்படி, ஒருவரைப்பற்றிப் பேசுவது சரியா, தவறா என்பது ஒரு புறம் இருக்க, இத்தகைய பேச்சுக்களிலிருந்து நாம் ஒன்றை அறிந்துகொள்கிறோம்.

பெரிய காரியத்தைச் சாதித்துவிட்ட ஒருவர் மண்டைக் கர்வம் கொள்வதை நியாயமானது என்று. உலகம் கருதுகின்றதா? அவ்வாறு சாதித்துவிட்டு ஒருவர் கர்வம் கொள்ளுவதனால் அப்பொழுதுங்கூட இது என்ன பெரிய காரியம்? என்றுதான் கூறுமே தவிர, இந்த உலகம் எதனையும் விரைவில் ஒப்புக்கொள்வதில்லை. இதிலிருந்து இரண்டு கேள்விகள் பிறக்க நியாயம் உண்டு.

முதலாவது, 'பெரிய காரியத்தைச் சாதித்தவர் கர்வம் கொள்வது நியாயமா?’ என்பது அடுத்தது, 'பெரிய காரியம், அல்லது செயற்கரிய செயல் என்பது யாது?' என்பதாகும். முதல் கேள்விக்கு விடை கூறுவது எளிது.

எவ்வளவு பெரிய காரியத்தைச் சாதித்தவர்களும், கர்வங்கொள்ளுதல் தகாது. உண்மையைக் கூறுமிடத்துப்