பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82 O அ. ச. ஞானசம்பந்தன்


கின்றோம். அவ்வாறானால், எதனை அரிய செயல் என்று கூறுவது? 'நீரின்மேல் நடத்தலையும், நெருப்பின் மேல் இருத்தலையும், வேறு ஒருவர் காணாமல் உலகத்தில் உலாவுதலையுங்கூட' எளிய செயல்கள் என்று தாயுமானப் பெருந்தகையார் கூறுகின்றார்.

இவைகள் எல்லாம் எளிய செயல்கள் என்றால், அரிய செயல்தான் யாது? தாயுமானவரே விடை கூறுகின்றார் இந்த வினாவிற்கு: 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது!’ என்று அவர் கூறும் பொழுதுதான் அரிய செயல் யாது என்பதை ஒருவாறு அறிய முடிகின்றது.

உலகத்தில் வாழ்கின்றவர்கள் செய்யக்கூடிய அரிய செயல்கள் அனைத்தினும் சிறந்தது ‘சிந்தையை அடக்கிச் கம்மா இருக்கின்ற' செயல்தான். இவ்வரிய செயலைச் செய்தவர்களே பிற அரிய செயல்களையும் செய்ய முடியும்.

செய்தற்கு அரிய செயலைச் செய்த அடியார்களின் வரலாற்றைக் கூறுவது பெரிய புராணம் என்னும் திருத் தொண்டர் புராணம். மிக எளிமையானது என்று கருதப்படும் செயல்களிலிருந்து மிக அருமையானது என்று கருதப்படும் செயல்கள் வரை அனைத்தையும் செய்து உள்ளார்கள் அப்பெரியவர்கள். அவர்களுள் இருவர் செய்த காரியங்களைப் பற்றித்தான் இன்று பலரும் ஐயத்தோடு பேசுகின்றனர். முதலாவது பேசப்படுபவர் இயற்பகையார்; இரண்டாவது பேசப்படுபவர் சிறுத் தொண்டர்.

பெரிய புராணத்தில் வந்துள்ள அறுபத்து மூன்று பெரியார்களும் செயற்கருஞ்செயல் செய்தவர்களே, அதாவது, சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கின்ற செயலைச் செய்தவர்கள். ஆனால், இயற்பகையார் செய்த செயல்தான் உலகியல் முறையில் நின்று பார்க்கும்போது கூடச் செயற்கருஞ் செயலாகக் காட்சி அளிக்கிறது.