பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84 O அ. ச. ஞானசம்பந்தன்


'நீங்கள் உரைத்த ஒன்றைச் செய்வது தவிர வேறு உரிமை எனக்கில்லை,' என்றாள்.

வந்த கிழவர் அவளை அழைத்துக்கொண்டு போகும் பொழுது இயற்பகையை நோக்கி, "யான் இவனை அழைத்துப் போகும் பொழுது நீர் துணையாய் வந்து, உம் சுற்றத்தார் தடை செய்யாமல் செய்வீராக.” என்றார்.

இயற்பகையார் அங்ஙனமே புறப்பட்டு எதிர்த்த சுற்றத்தாரை எல்லாம் அழித்துச் சாய்க்காடு வரையில் உடன் சென்றார். கிழவர், "இனி எனக்கு அச்சமில்லை நீர் மீண்டு போகலாம்!" என்றார். இயற்பகை சிறிது துாரம் மீண்டவுடன் கிழவர் அவரை நோக்கிக் கத்தத் தொடங்கினார்.

'இயற்பகை முனிவா, ஒலம்! ஈண்டு நீ வருவாய் ஒலம் செயற்கருஞ் செய்கை செய்த தீரனே, ஒலம் ஒலம்!' என்று கூவினவுடன், இயற்பகையார் மீட்டும் ஒடி வந்தார். என்ன புதுமை! கிழவரைக் காணவில்லை. இறைவன் அவருக்குக் காட்சி தந்தான். இதுவே. வரலாறு. கிழவர் மறைந்து இறைவன் தோன்றினான் என்பதை நம்ப முடியாது என்று கூறும் பெரியவர்கள் இவ்வரலாறு முழுவதையுமே நம்ப வேண்டுவதில்லை.

வந்த கிழவர் இயற்பகையாரின் ஆற்றலைச் சோதிக்கவே வந்தார். ஒருவன் கொள்கையைக் கொண்டு செலுத்துவதற்கும் ஒர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து விட்ட பொழுது கொள்கை என்பதெல்லாம் மறந்துவிடும். இது சாதாரண மனிதர்கள் சட்டம். செயற்கருஞ் செய்கை செய்யும் தீரர்கட்கு இந்த சட்டம் செல்லாது. அவர்கட்குக் கொள்கையின் எதிரே மனைவி, மக்கள், தாம் என்ற அனைவரும் ஒன்றுதான். மனைவி யைத் தருதல் சாதாரண மனிதன் கனவிலும் கருத முடியாத காரியம். ஆனால், சாதாரண மனிதன் செயற். கருஞ் செய்கை செய்யும் பெரியவனாக மாறும் பொழுது