பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 O அ. ச. ஞானசம்பந்தன்


மன்று. அற்பக் குறிக்கோளை அடைய முயன்று, அடைந்து விட்ட பிறகு வாழ்வின் சுவையை இழந்து விட்டவர்கள் இவர்கள். இது கருதித்தான் நம் பெரியோர்கள், ‘குறிக்கோளை மேற்கொள்ளும் பொழுது அது உயர்ந்த தாக இருக்கட்டும்,’ என்று கூறினார்கள்.

சோழன் நல்லுருத்திரன் என்ற புலவன் மனித இனத்தையே இரண்டாகப் பிரிக்கிறான்; முதலாவது இனத்தை எலி இனம்’ என்றும், இரண்டாவது இனத்தைப் “புலி இனம்’ என்றும் கூறுகிறான். ஆண்டு முழுவதும் பாடுபட்டு உழவன் நெல்லை விளைவிக்கிறான். வயலில் விளைந்த நெற்கதிர் முற்றித் தலை சாய்ந்திருக்கும் பொழுது சிறிதும் வருத்தமில்லாமல் அந்த வயலில் குடியிருக்கும் எலிகள் அந்த நெற்கதிர்களை நறுக்கித் தம்முடைய வளைகளில் கொண்டு போய்ச் சேர்த்து வைத்துக் கொள்கின்றன. கேவலம், வாழ வேண்டுமென்ற ஒரே எண்ணத்தால் இங்ங்னம் பிறருடைய முயற்சியை அனுபவிக்கின்ற எலி போன்ற மனநிலை உடையவர்களும் மக்கட் கூட்டத்தில் உண்டு.

இதன் எதிராக உள்ளவர்கள் வாழ்வில் உயர்ந்த குறிக்கோளை உடையவர்கள். எத்துணைத் துன்பம் வருவதாயினும் அதனைப் பொறுமையோடு ஏற்றுக்கொள் வார்களே தவிர, தம் குறிக்கோளிலிருந்து நழுவ மாட் டார்கள். புலிக்குப் பசி எடுத்தது; வலிமை பொருந்திய பன்றி ஒன்றை அடித்துக் கொன்றது. ஆனால், அப்பன்றி இடப்பக்கமாக வீழ்ந்து விட்டதாம். இடப்பக்கம் வீழ்ந்த விலங்கைப் புலி உண்பதில்லையாம். எனவே, அன்று முழுவதும் பட்டினியாகக் கிடந்து மறுநாள் உறுமலோடு புறப்பட்டுச் சென்று பெரிய ஆண் யானையை வலப்பக்கம் விழுமாறு அடித்து, அன்று உணவு உட்கொண்டதாம். இத்தகைய மனிதர்களும் உலகில் உண்டு. இந்த இரு வகை மக்களையும் பற்றிப் பேசிய சோழன் நல்லுருத்திரன் ‘எலி போன்ற மனிதர்களின் நட்பு எனக்கு வேண்டா.