பக்கம்:குறள் நானூறு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவியைப் பெருத காமத் துன்பத்தால் ஆடவர் பனைமடலால் செய்த குதிரைமீது ஏறி ஊரார்க்கு அறிவித்து விரும்பிய பெண்ணைப் பெறுவேன்" என்பர். காதலன் பிரிவால் கடல் போன்று பரவிய காமநோய் வாட்டினலும் பெண் மடலேறுவதை நினைக்கவும் மாட்டான். மடலேருத பெண்மையைப் போன்று பெருந்தகுதி வாய்ந்தது வேறு ஒன்றும் இல்லை. 356

ஊரார் என் காதலைத் துற்றுவது அலர். அந்த அலரால் நான் கொண்ட காதல் மேலும் என்னைக் கவ்விக்கொண்டு வளர்கின்றது. அந்த அலர் இல்லை யானுல் காதல் தன் பிடிப்பில் சுருங்கிவிடும். எனவே, அவர் வாழ்க! 357

அலர் தூற்றியே என் காதலைக் குறைத்துவிடலாம் என ஊரார் கருதுகின்றனர். அது நெய்யை ஊற்றுவ தால் நெருப்பை அவித்துவிடுவோம் என்பது போன்றே (քւգպւն. ○55 அன்பை ஊன்றிய நம் இனத்தவகை ஒரு நண்பன வது இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது. அதனினும் கொடுமையானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது. 359

தீ சுடும் வல்லமை உடையது என்பர். அது தன்னைத் தொடுபவரைத் தான் சுடும். காதல் நோயோ தன்னைத் தொடாது பிரிந்திருப்பவரைச் சுடும். எனவே, காதல் நோய் போன்று தீ வல்லமை உடையது அன்று. - - 360

148

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/160&oldid=555657" இலிருந்து மீள்விக்கப்பட்டது