உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை \f மலையாகிய இந்த இடத்தில் அவனுடைய காந்தட்பூவுக்குக் குறைவு ஏது? அவனுடைய களமும், அம்பும், யானையின் கொம்பும் இரத்தத்தாற் சிவத்திருப்பன என்றேன் அல்லவா? அவனுடைய குன்றமாகிய இதில் இரத்தத்தைப் போன்ற பூக்கள் குலைகுலையாக மலரும் காந்தட் செடிகள் நிறைய இருக்கின்றன" என்று தோழி சொல்கிருள். - 来 இறையனர் இயற்றிய பாட்டை முதலில் வைக்காமல் இந்தப் பாட்டை முதலில் வைத்தது ஏன்? திப்புத்தோளார் பாடலைக் காட்டிலும் கூந்தல் மணத்தைச் சொல்லும் இறையனர் பாடல் சுவையிலே குறைந்ததா?- எனக்கு ஒரு காரணம் தோன்றியது. திப்புத்தோளார் பாட்டில் முருகனைப்பற்றிய செய்தி வருகிறது. இரண்டாவது பாட்டு இறையனர் இயற்றியதானலும் முருகனைப்பற்றிய செய்தி அதில் இல்லை. ஆதலின் முருகனைக் கடவுள் வாழ்த்தில் வணங்கிய உள்ளம், அடுத்து அப்பெருமானப் பற்றிச் சொல்லும் பாட்டை வைக்க நினைத்தது இயல்பு தானே? முருகனைப் புறத்துறுப்பாகிய கடவுள் வாழ்த்தில் நினைத்தது போதாதென்று, அகத்துறுப்பாகிய பாடல் களிலும் முதலில் அவனே நினைக்கவேண்டுமென்ற எண்ணத் தால் இப் பாடலே முதற் பாட்டாக அமைத்திருக்கலாம் என்று தோன்துகிறது. - குறுந்தொகையில் இப்போது கடவுள் வாழ்த்து ஒன்றும், அகத்துறைப் பாடல்கள் நானுாற்று ஒன்றும் இருக்கின்றன. இதனைத் தொகுத்தவர் யூரிக்கோ என்பவர். இந்த நூலில் உள்ள பாடல்களைப் பாடின புலவர்கள் இருநூற்றைந்து பேர் என்று ஒரு பழைய குறிப்பில்ை தெரிய வருகிறது. - . . . . . . . . . .", - இந்தப் புத்தகத்தில் உள்ள பாடல்களைப் Lissiq-ul புலவர்கள் பாரதம் பாடிய பெருந்தேவனுர், இறையனுர்,