பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 1 () குறிஞ்சிமலர் படித்து மனத்தில் அசைபோட்டுக் கொண்டே போவேன் நான். அது எனக்குப் பிடிக்கும். பஸ் ஸ்டாண்டுக்குப் போய்ப் பின்பு பஸ் ஏறிக் கொள்வேன். எனக்குக் காரும் வேண்டாம், டிரைவரும் வேண்டாம். '

தெருவில் பூரணி வேகமாக நடந்தாள். விதவையின் திலக மிழந்த முகத்தைப் போல் ஞாயிற்றுக் கிழமை கடை வீதியில் கலகலப்பு இருப்பதில்லை! களை இருப்பதில்லை! நடந்து சென்று கொண்டிருந்தாள். அந்த விளம்பரப் பலகையைப் பார்த்து விட்டுச் சிறிது திகைத்து நின்றாள். முகம் சற்றே மலர்ந்தது. 'மீனாட்சி அச்சகம், குறித்த நேரம், குறைந்த செலவு என்று மெல்ல வாய்க்குள் படித்துக் கொண்டாள். அச்சகத்து முன் கதவு அன்று ஞாயிறு விடுமுறையின் அடையாளமாகச் சாத்தி யிருந்தாலும் முகப்பு அறையில் விளக்கு எரிவதும் அரவிந்தன் அமர்ந்திருப்பதும் நடை பாதையிலிருந்தே அவளுக்கு நன்றாகத் தெரிந்தன. முதல் நாள் எந்த இடத்தில் மயங்கி விழுந்தாளோ, அந்த இடத்துக்கு மிக அருகில் தான் நிற்பதை அவள் உணர்ந்தாள். இந்த இடத்தில் மயங்கி விழுந்திராவிட்டால் அரவிந்தன் என்னை அப்படிப் பாடியிருக்க மாட்டாரே என்று நினைத்துக் கொண்டபோது இன்பச் சிலிர்ப்புச் சிலிர்த்தது அவள் மனத்தில். காலையில் விசிட்டிங் கார்டு வாங்கி வைத்துக் கொண்ட போது மறுநாள் தான் அவனைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தாள் அவள். அதனால் என்ன? இப்பொழுது

பார்க்கக் கூடாதென்று சட்டம் ஒன்றுமில்லையே!

பூரணி சற்று நெருங்கி ஜன்னல் அருகே நின்று பார்த்தாள். உள்ளேயிருந்து தற்செயலாகத் திரும்பிய அரவிந்தன் அவள் வாய் திறந்து கூப்பிடுவதற்கு முன்பே அவளைப் பார்த்து விட்டான்.

'ஓ! நீங்களா ஏது இந்த நேரத்தில்... நாளைக்கு அல்லவா வருவதாகச் சொல்லியிருந்தீர்கள்?' என்று விசாரித்துக் கொண்டே கதவைத் திறப்பதற்காக எழுந்து வந்தான் அரவிந்தன். அந்த இரவு நேரத்தில் வீணாக அவரைத் தொந்தரவு படுத்தாமல் வீட்டுக்குப் போயிருக்கலாமே என்று முன்பு நினைத்ததற்கு மாறாக இப்போது நினைத்தாள் அவள். சிறிது நாணமும் வந்து தயங்கச் செய்தது. ஒல்கி ஒதுங்கி ஒசிந்து நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/112&oldid=555836" இலிருந்து மீள்விக்கப்பட்டது