பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 167

பள்ளிக்கூடத்துக்கே வரவில்லை என்று தலைமையாசிரியர் புகார் செய்ததாகச் சம்பந்தன் அக்காவிடம் சொன்னான். ஒதுவார்க் கிழவர் சொன்ன இடத்தை அடையாளம் சொல்லிச் சம்பந்தனை அங்கே போய்ப் பார்த்து வருமாறு துரத்தினாள் பூரணி, அவன் போய்ப்பார்த்து விட்டு ‘அண்ணனை அங்கே காணவில்லை’ என்று சொன்னான். திருநாவுக்கரசை எதிர்பார்த்து இரவு பதினோறு மணிவரை வீட்டு வாயிற்படியில் காத்திருந்தாள் பூரணி. அவன் வரவே இல்லை. எங்கே போய்த் தேடுவது? எப்படித் தேடுவது?’ என்று அவள் கலங்கிக் கொண்டிருந்த போது, மங்களேஸ்வரி அம்மாளின் கார் வந்து நின்றது. அந்த நள்ளிரவில் வெளிறிப் பயந்து போன முகத்தோடு காரிலிருந்து இறங்கிய அந்த அம்மாளைப் பார்த்தபோது, பூரணிக்கு ஒன்றும் புரியவில்லை. திகைப்பாக இருந்தது. பயமாகவும் இருந்தது.

"பூரணி இந்தப் பெண் வசந்தா தலையில் கல்லைப் ப்ோட்டு விட்டுப் போய்விட்டாளடி காலையில் கல்லூரிக்குப் போனவள் வரவே இல்லை, கல்லூரிக்கும் வரவில்லையாம். நிறையப் பணம் எடுத்துக் கொண்டு போயிருக்கிறாள். எங்கே போனாளென்று தெரியவில்லை. நான் ஒருத்தி எங்கே யென்று தேடுவேன்? வெளியில் சொன்னால் வெட்கக் கேடு? என்று அழுகிறாற் போன்ற குரலில் கூறினாள் அந்த அம்மாள்.

13

பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும் காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் - -

அழாததென்னோ?

- குண்டலகேசி

வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த விதி அது. மேலக்கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/169&oldid=555893" இலிருந்து மீள்விக்கப்பட்டது