பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 215

இதை முருகானந்தம் சொல்லிய போது பூரணிக்குப் பெருமிதமாக இருந்தது. "செல்வம் நிறைந்தவர்கள் துன்பங் களால் வேதனைப்படும் போது பிறருக்குத் தருமம் செய்து ஆறுதல் தேட வேண்டும். பழைய காலத்தில் செல்வர்களுக்குச் சாந்தி அளித்து மனநிம்மதி தந்த கருவி வள்ளன்மை என்ற கருவி தான். இன்றோ கேளிக்கைகளால் நிம்மதி தேட முயல்கிறார்கள். மங்களேஸ்வரி அம்மாள் போல பழைய முறையில் தருமம் செய்து நிம்மதி தேடுபவர்கள் மிகச் சிலர் தான் இன்று இருக்கிறார்கள்' என்று முருகானந்தத்திடம் பூரிப்புடன் கூறினாள் பூரணி.

'செய்தித்தாள்களில் நீங்கள் என்ன பொருள் பற்றிப் பேசப் போகிறீர்களென்று அறிவிப்புக் கொடுக்க வேண்டும் அக்கா!' என்று கேட்டான் முருக்ானந்தம். -

பூரணி சிறிது நேரம் சிந்தித்தாள். பின்பு ஒரு சிறிய காகிதத்தை எடுத்துக் கவிகள் காணாத பெண்மை’ என்று எழுதி அவன் கையில் கொடுத்து அனுப்பினாள்.

ஒதுவார்க் கிழவர் வீட்டு காமு வைப் பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். வெள்ளிக்கிழமை பூச்சூட்டலும், வளைகாப்பும், நடைபெற இருந்தன. "எங்கேயாவது கூட்டம், சொற்பொழிவு என்று கிளம்பி விடாதே; என்ன வேலை இருந்தாலும் ஒரு நடை வந்து விட்டுப் போ' என்று அந்தப் பாட்டி தள்ளாத காலத்தில் சிரமத்தைப் பாராமல் தானே நேரில் வந்து பூரணியை அழைத்து விட்டுப் போயிருந் தாள். எனவே வெள்ளியன்று மாலை மங்கையர் கழகத்துக்குப் புறப்படுமுன் பூரணி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தாள்.

முழங்கை நிறையக் கண்ணாடி வளையல்கள் குலுங்கிடத் தலை தாங்காமல் பூச்சூடிக் கொண்டு. நாற்காலியில் உட்கார்ந் திருந்தாள் காமு. சுற்றிலும் பெண்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. தாயாகிக் கொண்டிருந்த அந்தக் கோலத்தில் அதிக அழகில்லாத காமுவின் முகத்தில் கூட ஒரு புதிய ஒளி படர்ந்திருப்பதைப் பூரணி பார்த்தாள். புதிதாக ஒரு நல்ல கவிதையை எழுதி வெளியிடத் துடிக்கும் கவியின் முகம்போல் உலகத்துக்குப் புதிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/217&oldid=555940" இலிருந்து மீள்விக்கப்பட்டது