பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 குறிஞ்சிமலர் யெல்லாம் நாம் பார்த்துக் கொள்கிறோம். நீ இருக்கிறாய். அந்தத் தையற்கடைப் பிள்ளையாண்டான் இருக்கிறான். ஒரு நாளைக்கு நூறு கூட்டம் போட்டுப் பேசச் சொன்னாலும் அந்தப் பையன் சளைக்காமல் பேசுவான். பிரச்சாரமே அதிகம் வேண்டாம். ஒரு பெண் தேர்தலுக்கு நிற்கிறாள் என்பதே போதும். பூரணியைப் போல இத்தனை பேருள்ள பெண் நிற்கிறபோது போட்டி யிருந்தாலும் வலுவிழந்து போகும். நீ என்ன நினைக்கிறாய் அரவிந்தன்? இதில் உனக்கு ஏன் தயக்கம் ஏற்படுகிறது?" "நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான்; ஆனால்...' "ஆனால் என்ன ஆனால்?... தைரியமாக எனக்கு நல்ல முடிவு சொல்! பூரணியைப் போல் நல்லவர்கள் நுழைவதாலேயே அரசியல் நிலை சீர்திருந்தலாமல்லவா தான் எந்தச் சூழ்நிலையி லிருந்தாலும் அந்தச் சூழ்நிலையைத் தூய்மைப்படுத்துகிற புனிதத் தன்மைதான் அவளிடம் இருக்கிறதே! அப்படி இருக்கும் போது நாம் ஏன் அஞ்ச வேண்டும்?"

நீங்கள் சொல்லுகிறீர்கள். எனக்கென்னவோ பயமாகத் தானிருக்கிறது.' -

'இதோ பார், அரவிந்தன் இந்தக் காரியத்தை இவ்வள அலட்சியமாக நீ கருதலாகாது. என் மானமே இதில் அடங்கி யிருக்கிறது. நகரத்துப் பெரிய மனிதர்கள் அடங்கிய கூட்டத்தில் நான் வாக்குக் கொடுத்துவிட்டேன். பூரணியை நிறுத்தினால் தான் இந்தத் தொகுதியில் வெற்றி கிடைக்குமென்று எல்லோரும் நம்புகிறார்கள். அடுத்த ஞாயிறன்று தேர்தல் பற்றிய தீர்மானங் களுக்காக மறுபடியும் நாங்கள் சந்திக்கிறோம். அன்று அவர் களுக்கு இது பற்றி உறுதி சொல்வதாக நான் ஒப்புக் கொண் டிருக்கிறேன். மீனாட்சி சுந்தரத்தின் குரல் திட்டமாக உறுதியாக - சிறிதளவு கண்டிப்பும் கலந்து ஒலித்தது.

"இன்னும் நூறுஆண்டுகளுக்குப் போதுமான அரசியல் வாதிகளும் தலைவர்களும் இப்போதே இந்த நாட்டில் நிறைந் திருக்கிறார்கள். விவேகானந்தர்போல், ராமலிங்க வள்ளலார் போல் ஒழுக்கத்தையும், பண்பாடுகளையும் ஆன்ம எழுச்சியையும் உண்டாக்குகிற ஞானிகள் தான் இந்த ஒரு நூற்றாண்டுக்குள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/250&oldid=555973" இலிருந்து மீள்விக்கப்பட்டது