பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 குறிஞ்சிமலர்

அவள் எவ்வளவோ படித்திருக்கிறாள். அவளுடைய இதயம் துன்பங்களால் பக்குவப்பட்டிருக்கிறது. அன்பைக் கூட அந்தரங்க மாக வைத்துக்கொள்ளத் தெரிந்தவள் அவள். ஆனால் இப்போது இந்தக் கண்த்தில் அவள் உணருகிற தாபத் தவிப்பை எந்தப் பெண்ணும்; எந்தக் காலத்திலும் தவிர்த்திருக்க முடியாதென்று அவளுக்குத் தோன்றியது. ஊர் ஊராகப் பொதுப்பணிக்கும் சொற்பொழிவுகளுக்கும் அலைந்து கொண்டிருந்த காலத்தில் அவள் மறந்திருந்த அல்லது அவளை மறந்திருந்த இந்தத் தவிப்பு காய்ந்த மரத்தில் நெருப்புப்போல் இந்த ஒய்வில் இந்தத் தனிமையில் அவளை வாட்டுகிறதே! மனிதர்கள் மனிதர்களாகவே இருப்பதற்குக் காரணமான சில உணர்ச்சிகள் உண்டு. அவற்றை வென்றுவிடுவது எளிமை அல்லவென அவள் நினைத்தாள்.

பகல் உணவுக்கு வசந்தா அவளை எழுப்பினாள். சாப்பாடு முடிந்ததும், பூரணியை உட்கார்த்தி தான் வாங்கிவந்திருந்த வளையல்களை அவளுக்கு அணிவித்தாள் வசந்தா. முன் கைகளை மறைத்துக் கொண்டு, கலின் கலின் என்று கைகளை ஜலதரங்கம் வாசிப்பதுபோல் வளையல்கள் நாதமிட்டன.

'அக்கா இந்தக் கோலத்தில் கலியாணப்பெண் மாதிரி அழகாக இருக்கிறீர்கள்' என்று சொல்லிச் சிரித்தாள் வசந்தா. பூரணி எதை மறக்க முயன்று கொண்டிருந்தாளோ அதை அதிகமாக்கினாள் வசந்தா. உடம்பு கொள்ள முடியாமல் மனத்திலும் இடம் போதாமல் நிரம்பி வழிகிற இந்தப் பூரிப்பை எங்கே போய்க் கொட்டுவது? -

கொட்டுவதற்கு இடம் இருந்தது இரண்டு நாட்களுக்கு எங்கும் அசைவதில்லை என்று தமிழ்ச் சங்கத்துப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படித்துத் தீர்ப்பதென்று கண்டிப்புடன் உட்கார்ந்தாள் பூரணி. தாகூரின் கீதாஞ்சலி, இராம தீர்த்தர், விவேகானந்தரின் ஆங்கிலச் சொற்பொழிவு நூல்கள், சி.இ.எம். ஜோடின் அறிவு நூல்கள் இவற்றின் சிந்தனை உலகில் நீந்தினாள். எச்.ஜி. வெல்ஸ், ஷா போன்றோரின் நூல்களும் சில இருந்தன.

இரண்டாவது நாள் மாலை சி.இ.எம். ஜோடினது நாகரிகத்தின் கதை (தி ஸ்டோரி ஆஃப் சிவிலிசேஷன்) என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/270&oldid=555993" இலிருந்து மீள்விக்கப்பட்டது