பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 30?

கேட்ட பின்பு அவரிடமிருந்து விரைவில் கத்தரித்துக் கொண்டு புறப்பட்டால் போதுமென்று ஆகிவிட்டது அவனுக்கு.

'நீ ஏனப்பா, பைத்தியக்காரப் பிள்ளையாயிருக்கிறாய்! இவ்வளவு தூரம் வந்தவன் வீட்டுக்கு வந்துவிட்டுப் போவாய் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கோடைக் கானலுக்கு நாளைக்காலையில் போகலாம் தம்பீ. இப்போது வீட்டுக்கு வந்துதான் ஆகவேண்டும்' என்றார் பர்மாக்காரர். அவருடைய மகளும் தந்தையின் பக்கம் பேசி அவனை வரச்சொல்லி வற்புறுத்தினாள். அரைகுறைத் தமிழ்ச்சொற்களோடு கூடிய குயில் குரலில் அவருடைய பர்மிய மனைவியும் அவனை நோக்கி ஏதோ கூறினாள்.

'பணமும், பகட்டும் உள்ளவர்களைத் தவிர வேறு ஆட்களை மதிக்காத இந்த பர்மாக்காரக் கிழவர் இன்று ஏன் இப்படி என்னிடம் ஒட்டிக் கொள்கிறார்? சிற்றப்பனின் சொத்துக்களுக்கு நான் வாரிசு ஆகப்போகிறேன் என்பதற்காகவா? அடடா, பணமே. உனக்கு இத்தனை குணமுண்டா? இத்தனை மணமுண்டா என்று எண்ணிக்கொண்டான் அரவிந்தன். பர்மாக்காரருடைய சிரிப்பிலும், அழைப்பிலும், அன்பிலும், ஏதோ ஒர் அந்தரங்கமான நோக்கத்தின் சாயல் பதிந்திருப்பதை அவன் விளங்கிக் கொள்ள முயன்றான். அலாரம் வைத்த கடிகாரம் போல் நேரம் பார்த்து, அளவு பார்த்து உள்நோக்கத்தோடு அவர் சிரித்துப் பழகு கிறாரா? அந்த மனிதரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொண்டு விடுவதற்காகவாவது அவருடைய வீட்டுக்குப் போய் வருவ தென்று முடிவு செய்து கொண்டு இணக்கம் தெரிவித்தான் அரவிந்தன். இரயில் நிலைய வாயிலில் அவருடைய புதிய கார் பெரிதாக, அழகாக நின்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறிக் கொண்டதும் கார் புறப்பட்டது.

நான் சொல்றது. இதுதான், தம்பீ! இதுவரைக்கும் நீ எப்படியெல்லாமோ இருந்திருக்கலாம். இனிமேல் உனக்குன்னு ஒரு அந்தஸ்து வேணும் இலட்ச ரூபாய்ச் சொத்துக்கு வாரிசாகி யிருக்கிறாய்! அதுக்குத் தகுந்த உறவு, பழக்கம் எல்லாம் உண்டாகணும். அந்த மீனாட்சி அச்சக வேலையை நீ விட்டுவிடலாம் என்கிறது என் அபிப்பிராயம். நீயே சொந்தத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/303&oldid=556026" இலிருந்து மீள்விக்கப்பட்டது