பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 குறிஞ்சி மலர்

"என்னடி பெண்ணே நான் கேட்டுக் கொண்டே இருக் கிறேன். நீயானால் பதில் சொல்லாமல் நாணிக் கொண்டே நிற்கிறாய்? என்னிடம் சொல்வதற்கு என்ன வெட்கம் வேண்டிக் கிடக்கிறது! நீயும் பச்சைக் குழந்தை இல்லை, அரவிந்தனும் பச்சைக் குழந்தை இல்லை. எங்களை அதிகம் சோதனை செய்யாமல் 'சரி என்று ஒரு வார்த்தை சொல்லி விட்டீர் களானால் திருமணங்களைச் சேர்த்தே நடத்திவிட வசதியாக இருக்கும்."

மேலும் மெளனம் சாதித்தாள் பூரணி. அவளுடைய கண்களும் முகமும் நாணம் சுரந்து, நகை சுரந்தது. உணர்வுகள் சுரந்து தோன்றின.

'என்னை உன் தாய் போல் நினைத்துக் கொண்டு சொல் பூரணி நான் உனக்கு அந்நியமானவள் இல்லை."

நீண்ட நேர மெளனத்துக்குப்பின் உள்ளத்து உணர்வுகளின் இனிமையெல்லாம் கலந்த கோமளமான மெல்லிய குரலில் தயங்கித் தயங்கிச் சொன்னாள் பூரணி. "அவருக்கு எப்படி விருப்பமோ அப்படியே செய்யுங்கள். அவருக்குச் சம்மதமானால் எனக்கும் சம்மதம் தான்."

"அவருக்கு என்றால் எவருக்கு?'

"அவருக்குத்தான். ' ஈடில்லா அழகும், இணையில்லாப் புன்னகையுமாகச் சிவந்து சிரித்தது பூரணியின் முகம். சொல்லி விட்டு அவள் அம்மாளின் முன்னாலிருந்து நழுவி ஓடி விட்டாள். அவளுடைய உள்ளம் துள்ளியது, பொங்கியது, பூரித்தது. மென்மையும் நுணுக்கமும் பொருந்திய கனவுகளும் நினைவு களும் அவளுடைய மனப் பரப்பெல்லாம் எழுந்தன.

பூரணியை ஒருவாறு சம்மதிக்கச் செய்துவிட்ட மன

நிறைவோடு நின்ற மங்களேசுவரி அம்மாள், மீனாட்சி சுந்தரம் தொங்கிய முகத்தோடு திரும்பி வருவது கண்டு திகைத்தாள்.

"என்ன காயா, பழமா?"

'காய்தான், அவன் சம்மதிக்கவில்லை."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/336&oldid=556059" இலிருந்து மீள்விக்கப்பட்டது