பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 357

போயிற்று. சிற்றப்பாவின் சொத்துகள் நல்ல சமயத்தில் மீனாட்சி சுந்தரத்துக்கு உதவ வேண்டுமென்று அவன் மனம் ஆர்வத்தோடு உந்தியது. கணக்குப் பிள்ளை, 'பெண் கல்யாணத்துக்கு நிற்குதுங்க' என்று பஞ்சப்பாட்டுப் பாடினார். அவர் கையில் இரண்டாயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு, 'இப்போதைக்கு இந்த வீட்டிலும் நீரே குடியிருந்து கொண்டிரும் என்றான் அரவிந்தன். 'நீங்க புண்ணியப் பிறவீங்க' என்று நாத்தழுதழுக்கக் கூறினார் அவர்.

ஐம்பத்தையாயிரம் ரூபாய் நோட்டுக் கற்றைகளை எண்ணி முன்னால் வைத்தால், தனது நன்றிக்குரிய முதலாளியின் இரத்தக் கொதிப்பு நோய் பஞ்சாகப் பறந்து விடும்' என்று நம்பி ஆவல் சுரந்தது அவன் மனத்தில். ஆனால் அன்று அவன் இரயிலுக்குப் புறப்படுவதற்கு முன் வந்த தந்தி அவனுடைய ஆவலைக் கொன்று கதறி அழும் அழுகையாய்ப் பொங்கிவரச் செய்தது. தந்தியைப் படித்துவிட்டுச் சிறு குழந்தைபோல் மாலை மாலையாகக் கண்ணிர் வடித்து அழுதான் அரவிந்தன்.

28

ஊரெல்லாம் கூடிஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பினமென்று பேரிட்டுச் சூரையல் காட்டிடைக் கொண்டுபோய்ச்சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தார்கள்

- திருமூலர்

தன்னைப் பெற்ற தந்தை இறந்தபோதுகூட அரவிந்தன் இப்படி அதிர்ந்து அலமந்து கதறியழவில்லை. அப்போது அவன் சிறுவன். இப்போதோ உணர்வுகளில் தோயும் அளவுக்கு மனம் பக்குவப்பட்ட இளைஞன். தன்னை வளர்த்து உருவாக்கி வாழ் வளித்த வள்ளல் இறந்து போய் விட்டார் என்று அந்தத் தந்தியில் படித்த போது அதை உண்மையாக ஏற்றுக்கொண்டு நம்பி ஒப்புக்கொள்ளவே, அவன் மனம் தயங்கியது. எவருடைய நன்றிக் கடனைத் தீர்ப்பதற்காக அவன் சிற்றப்பாவின் உடைமைகளில் பெரும் பகுதியை விற்றுப் பணமாக்கிக் கொண்டு புறப்பட்டானோ அவர் இறந்துபோய்விட்டார் என்று தந்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/359&oldid=556082" இலிருந்து மீள்விக்கப்பட்டது