பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 குறிஞ்சிமலர்

அருகருகே இரண்டு அச்சகங்கள் இருந்தால் தொழில்முறைப் போட்டிகளும், வம்பு வழக்குகளும் ஏற்படாமலா இருக்கும்? ஒவ்வொரு வம்பாகத் தலை காட்டியது. ஒரு நாள் காலை மீனாட்சி அச்சகத்து முன் அறையில் அரவிந்தனும் முருகானந்த மும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போது நாட்டுப்புறத்து மனிதர் ஒருவர் திருமண அழைப்பிதழ் அச்சிட வேண்டுமென்று வந்தார். உயர்ந்த காகிதத்தில் இரண்டு கலரில் ஆயிரம் பிரதிகள் அச்சிட என்ன செலவாகும் என்று கேட்டார், அரவிந்தன் ஒரு துண்டுக் காகிதத்தில் கணக்குப்போட்டுக் கூட்டி அவரிடம் தொகையைச் சொன்னான்.

அடுத்தாற்போல் இருக்கிற 'காமாட்சி பிரசில் நீங்க சொல்றதுலே சரிபாதித் தொகைக்கு அச்சடித்துத் தாராங்களே ஐயா! இதென்ன அநியாயமாப் பணம் கேட்கிறீங்க' என்று கோபித்துக்கொண்டு எழுந்துபோய்விட்டார் வந்த மனிதர். மறுநாள் அதே நாட்டுப்புறத்து மனிதர் காமாட்சி அச்சகத்தில் அச்சிட்டு வாங்கிக்கொண்ட அழைப்பிதழ்களுடன் மீனாட்சி அச்சகத்தில் ஆத்திரத்தோடு நுழைந்து "இதோ பாருங்க, ஐயா இந்தப் பத்திரிகையை. நேற்று நீங்க சொன்னதுலே பாதி ரேட்டுக்குத்தான் காமாட்சி பிரஸ்காரன் அடிச்சுத் தந்திருக்கிறான்? இதற்கு என்ன குறை வந்திருச்சாம்' என்று அரவிந்தனிடம் ஒரு பத்திரிகையை எடுத்துக்காட்டிக் கூச்சல் போட்டார். அவர் காட்டிய பத்திரிகையைக் கையில் வாங்கிக்கொண்டு, 'கொஞ்சம் உட்காருங்கள், பெரியவரே என்று சமாதானம் கூறி அவரை உட்கார வைத்துவிட்டு அந்த அழைப்பிதழைப் படிக்கலானான் அரவிந்தன்: - -

'எனது மகள் திருநிறைச்செல்வி மரகதத்துக்கும் மேல்ப் புத்தகரம்... மகன் திருநிறைச்செல்வன் கந்தசாமிக்கும் நடைபெற இருக்கும் மரண வைபவத்துக்குத் தாங்கள் சுற்றமும் உரவும் புடைசூழ வந்திருந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்யுமாறு வேண்டிக் கொல்லுகிறேன்' என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் படித்ததும் அரவிந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. அடப்பாவிகளா? கை கூசாமல் 'மண வைபவத்தை மரண வைபவம்' என்று அடித்துக் கொடுத்திருக்கிறீர்களே என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/366&oldid=556089" இலிருந்து மீள்விக்கப்பட்டது