பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 குறிஞ்சிமலர்

மனம் வருந்தியது. அப்போது, திடீரென்று ஒரு தீர்மானத்துக்கு வந்ததுபோல் அவன் முகபாவம் மாறியது. அச்சகத்தைப் பார்த்துக் கொள்ளும்படி ஊழியனிடம் கூறி விட்டுப் புறப்பட்டான்.

'பர்மாக்காரர் எஸ்டேட் வரையில் வருவாயா? " என்று வண்டிக்காரனிடம் வினவினான்.

'அவ்வளவு தூரம் வண்டியில் போய்த் திரும்ப நேரம் ஆகுங்களே? என்று வண்டிக்காரன் இழுத்தான்.

'பரவாயில்லை, போய் வரலாம் புறப்படு!" என்று கூறிவிட்டு வண்டியில் ஏறி உட்கார்ந்தான் அரவிந்தன். வண்டி புறப்பட்டு விட்டது. அன்று மங்களேசுவரி அம்மாளின் இளைய பெண் செல்லத்துக்குப் பிறந்தநாள். அதற்காக அரவிந்தனை விருந்துச் சாப்பாட்டுக்கு அழைத்துக் கொண்டு போகலாம் என்று வசந்தாவும் முருகானந்தமும் அச்சகத்துக்குத் தேடிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தேடிக் கொண்டு வரும்போது பகல் பதினொரு மணிக்குமேல் இருக்கும். அப்போதும் அரவிந்தன் திரும்பி வந்து சேரவில்லை. முதல்நாள் இரவு பன்னிரண்டு மணி வரை அரவிந்தனுடன் முருகானந்தமும் அச்சகத்தில் தான் இருந்தான். அப்போதே மறுநாள் செல்லத்தின் பிறந்ததின விருந்துக்கு வரவேண்டும் என்று அரவிந்தனிடம் சொல்லி யிருந்தான். அப்படிக் கூறியிருந்தும், அரவிந்தன் அதை மறந்து எங்கே போயிருப்பான்? என்று முருகானந்தமும் திகைத்தான். அந்தச் சமயத்தில் அச்சகத்து ஊழியன் வந்து உள்ளே திருநாவுக்கரசு படுத்திருப்பதைச் சொன்னான். பிளாஸ்திரி ஒட்டும் துணிக்கட்டுமாகப் பரிதாபப் படத்தக்க நிலையில் படுத்துக் கிடந்த திருநாவுக்கரசைக் கண்டதும் முருகானந்தத்துக்கே முக்கால் பகுதி என்ன நடந்திருக்க வேண்டும் என்று புரிந்து விட்டது. மீதிக் கால் பகுதி விவரம் திருநாவுக்கரசு கூறிவிட்டான்.

'வசந்தா! நீ வீட்டுக்குப் போ, இங்கே ஏதோ கோளாறு நடந்திருக்கிறது. அரவிந்தன் வந்ததும் நான் சாப்பிடுவதற்கு அழைத்துக் கொண்டு வருகிறேன்' என்று கூறி மனைவியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அச்சகத்தில் தங்கிக் காத்திருந்தான் முருகானந்தம். நேற்றிரவே சொன்னேன். இந்த அரவிந்தன் கேட்டால்தானே? நானே அச்சகத்தில் படுத்திருந்து காலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/390&oldid=556113" இலிருந்து மீள்விக்கப்பட்டது