பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 குறிஞ்சிமலர் 'நீ மட்டும் தனியாக இங்கே வீடு வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகிறாய் பெண்னே? ஒரே குடும்பமாகப் பழகிக் கொண்டிருக்கிற நாம் ஒரே குடும்பமாக வசிக்க ஆசைப்படுவதில் என்ன தவறு?" என்று மீண்டும் இரண்டொரு முறை வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தாள் மங்களேசுவரி அம்மாள். பூரணி இதற்குச் சரியாக மறுமொழி கூறவில்லை.

அன்றைக்கு மாலையில் திருப்பரங்குன்றம் சென்ற அவர்கள் மதுரை திரும்பும்போது எட்டு மணிக்கு மேலாகி விட்டது. அங்கிருந்து காரில் திரும்பிப் புறப்படும்போது காரின் பின் புறத்துக் கண்ணாடி வழியாக ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தாள் பூரணி. குன்றின் உச்சியில் நீல ஒளி உமிழ்ந்து சிரித்துக் கொண்டிருந்தது ஓம். காரின் ஒட்டத்தில் விரைவாகப் பின்னுக்கு நகர்ந்து கொண்டு போகும் அந்த ஊரிலும், குன்றின் உச்சியில் ஒளி மலராய் மலர்ந்து வெண் நீலச் சுடர் திகழும் ஒமிலும்தான் எத்தனை அழகு! இந்த அழகில் தானே அப்பாவின் மனம் தோய்ந்து நின்றது! இந்த அழகில்தானே அப்பாவின் சிந்தனை களும் தத்துவங்களும் மலர்ந்தன. அந்த அழகில் தானே அப்பா என்னை வளர்த்து அறிவாக்கி ஆளாக்கி விட்டார்!’ என்று பழையனவும் புதியனவுமாகிய நினைவுகளை நினைத்து நினைத்து நெட்டுயிர்த்தாள் அவள். அன்று இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள் பூரணி. சிந்தனைகளின் தவிப்பில் புழுங்கியது அவள் உள்ளம்.

திருப்பரங்குன்றத்தின் சிறிய தெருக்களில் மதுரை நகரத்தின் அகன்ற வீதிகளில் தான் நடந்தும், காரிலும் சென்றபோது சில ஆண்டுகளுக்கு முன் பழகியவர்களும், பழகாதவர்களும், தன்னை எப்படிப் பார்த்தார்களோ அதைவிட அதிகமான பயத்துடனும் மரியாதையுடனும் இப்போது பார்ப்பதை அவள் தெரிந்து கொண்டிருந்தாள். மேடை, பிறர் புகழ்ச்சி, வெளிநாட்டுப்பயணம், தேர்தல் எல்லாமாகச் சேர்ந்து சாதாரண மக்கள் அருகில் நெருங்கக் கூசியும் தயங்கியும், ஒதுங்குகிற கெளரவத்தைத் தன்னிடம் சேர்த்துவிடத் தொடங்கியிருப்பதும் அவளுக்கு விளங்கிற்று. செல்வமும், செல்வாக்கும், புகழும் சேரச் சேர அதைக் கண்டு சாதாரண மக்கள் பயப்படத் தொடங்கி மதித்து நிற்கிறார்கள். ஆனால் அவற்றுக்குரியவர் மேல் அன்பை நெகிழவிடக் கூசுகிறார்கள். அன்பால் நெகிழாமல் பயத்தால் நெகிழும் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/420&oldid=556143" இலிருந்து மீள்விக்கப்பட்டது