பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 குறிஞ்சி மலர் மேல் விழுந்த உளுந்துகள் சிதறிப் பிரிவது போல் கும்பல் கும்பலாக மக்கள், கூடிப் பல்வேறு வழிகளில் பிரியும் கலகலப்பான இடம் அது. சினிமாவிற்கு நிற்கிற கியூ வரிசை, கடைகளின் கூட்டம், நீலமும் சிவப்புமாக விளம்பரம் காட்டும் மின்சாரக் குழல் விளக்குகள் - எல்லாம் பார்த்துக் கொண்டே பூரணி காரில் சென்றாள்.

கடைகளின் மின்விளக்குகளில் நியாயம் மொத்தமாகவும் சில்லரையாகவும் எரிந்து கொண்டிருந்தது. வியாபாரம் சுறுசுறுப் பாக நடக்கிற கூட்ட நேரம். வடக்கத்திக்காரன் கடை ஒன்றி லிருந்து சப்பாத்தி நெய்யில் புரளும் மணம் மூக்கைத் துளைத்தது. சோதி என்னும் கரையற்ற வெள்ளம் தோன்றி எங்கும் திரை கொண்டு பாய்வது போன்று இலங்கிற்று அந்த வீதி. காரின் வேகத்தில் ஒடுகிற திரைப்படம் போல அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டே போன அவள் மனதில் சோர்வு வந்து புகுந்தது. வீட்டையும், பசியோடு விட்டு வந்த தங்கை தம்பியரையும் நினைக்கிற போது கவலை வந்து நிறைந்தது. கார் திரும்பித் திரும்பி வழிகளையும் வீதிகளையும் மாற்றிக் கொண்டு விரைந்தது.

'சாயங்காலம் கமலாவை வீட்டுக்கு வரச் சொல்லியிருந்தேன். அவள் வேறு வந்து காத்திருப்பாள். குழந்தையிடம் பேச்சுக் கொடுத்து விட்டு நிலைமையைத் தெரிந்து கொண்டிருந் தாளானால் அவள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவே வெட்கமாக இருக்குமே! கடவுளே ! உலகத்தில் பசியையும் பண்பையும் ஒரே இடத்தில் ஏன் சேர்த்துப் படைத்திருக்கிறாய்? வயிற்றையும் வாய்மையையும் ஏன் ஒன்றாக இணைக்கிறாய்?"

பூரணியின் நினைவு நிற்கவில்லை. ஆனால் கார் நின்று விட்டது. இரயில்வே கேட் அடைத்திருந்தது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் போகும் சாலையில் மூன்று இரயில்வே கேட்டுகள் குறுக்கிடுகின்றன; அந்த சாலையில் அது ஓர் ஓயாத தொல்லை. ஆண்டாள் புரத்துக்கு அருகில் உள்ள கேட் மூடியிருந்தது, தெற்கேயிருந்து எக்ஸ்பிரஸ் போகிற நேரம்.

எக்ஸ்பிரஸ் போயிற்று. கேட் திறந்தார்கள். கார் மறுபடியும் விரைந்து வீட்டு வாசலில் போய் எல்லோரும் காணும்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/78&oldid=555802" இலிருந்து மீள்விக்கப்பட்டது