பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ட் சி க ள் 127

முழங்தாள் இரும் பிடிக் கயங்தலைக் குழவி

நறவு மலி பாக்கத்துக் குறமகள் ஈன்ற

குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி,

முன் நாள் இனியது ஆகி, பின் காள்

அவர் தினேப் புனம் மேய்ந்தாங்கு,

பகை ஆகின்று, அவர் நகை விளையாட்டே.

-குறியிறையார்

102. தும்பி விடு தூது!

‘மணி போலும் அழகிய சிறகுகள் கொண்ட தும்பியே! நீ வாழ்க! நீ அந்த மலே காட்டுக்குச் சென்றால் இவளது காதலனி டத்திலே ஒரு வார்த்தை சொல்வாயாக. அது என்ன தெரியுமோ? அவனுடன் கூடி இல்லறம் நடத்த வேண்டிய அவள், இன்னமும் இங்கே மனேயிலே அடைந்து வருக்திக்கிடக்கிருள் என்று சொல்” என்றாள் தோழி.

அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி! - இல் மொழிக்கு அச்சம் இல்லே ஆவர் காட்டு அண்ணல் நெடு வரைச் சேறிஆயின், கடவை மிடைந்த துடவை.அம் சிறு தினத் துளர் எறி நுண் துகள் களஞர் தங்கை தமரின் தீராள் என்மோ - அரசர் நிரை செலல் நுண் தோல் போலப் பிரசம் தூங்கு மலைகிழவோற்கே !

-தும்பிசேர் கீரஞர்

103. நல்ல செய்தி!

‘நல்ல செய்தி” என்றாள் தோழி. ‘என்ன ? சொல் ’’ என்றாள் அவள். “அவருடைய வேலையாளக் கண்டேன்’