பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ா ட் சி க ள் 195

அஞ்சுகிறது பெண் வங்கா. தனது காதலனைக் கூவி அழைக்கிறது.

காதலியைப் பிரிந்து செல்ல கினைக்கிருன் அவன். அப்போது அவனுக்கு வங்கா கினேவுதான் வருகிறது.

“சீச்சி ! இளமை நீண்டநாள் இராது. இந்த இளமை இருக்கும்போது காதல் இன்பத்தை அநுபவித்து விடவேண்டும். பொருள் தேடிப் பிரிந்தால் இளமை முடிந்துவிடும். இன்பம் துய்க்க முடியாது’ என்று முடிவு செய்கிருன். வங்காக் கட்ந்த செங் காற் பேடை எழால் உற வீழ்ந்தென, கணவற் காணுது, குழல் இசைக் குரல குறும் பல அகவும் குன்று உறு சிறு நெறி அரிய என்னது, ‘மறப்பு அருங் காதலி ஒழிய இறப்பல் என்பது, ஈண்டு இளமைக்கு முடிவே.

-துங்கலோரி

181. அலைமோதிய அபலை

‘கடற் கரையிலே அலைமோதுகிறது. வேகமாக மோதிக்

கொண்டே யிருக்கிறது. நீண்டநேரம் மோதுகிறது. கரையில் உள்ள மணல் என்னுகிறது இடிந்து சரிகிறது” என்றாள் அவள்.

  • அந்த மாதிரி?” என்று நீட்டினுள் தோழி.

“அந்த மாதிரி? நாணம் என்றதொரு கரையிருந்தது என் னிடத்திலே. காதல் என்ற அலே மோதியது. மோதி மோதி, அந்த நாணம் என்ற கரை சரிந்து இடிந்து விழுந்துவிட்டது. இனி என்ன இருக்கிறது? நீ என்ன என்றால் காதலனுடன் ஒடிப்போ என்கிறாய்’ என்றாள் அவள். அளிதோ தானே . நாணே நம்மொடு கனி நீடு உழங்தன்று மன்னே ; இனியே, வான் பூங் கரும்பின் ஒங்கு மணற் சிறு சிறை தீம் புனல் நெரிதர வீந்து உக்கா அங்கு,