பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(02 கு று ங் தொ ைகக்

“மாலேயிலே காட்டுப்பூனே வந்து வழக்கமாகத் தங்கும் வேலியருகே பதுங்கும். அது கண்டு கோழி என்ன செய்யும்? பயந்து போகும் கூவும். தன் குஞ்சுகளை அழைக்கும்.’’

‘அந்த மாதிரி?’ என்றான் அவன் இடை மறித்து.

‘அந்த மாதிரி உன் ஆசைநாயகி அலறுவாள். பழி கூறு வாள். உன்னை நான் இ ரு த் தி க் கொள்வேனே என்று அஞ்சுவாள்’

‘அதனல்...?”

“அதல்ை...வராதே’

மனே உறை கோழிக் குறுங் காற் பேடை, வேலி வெருகினம் மாலை உற்றென, புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு இன்னது இசைக்கும் அம்பலொடு வாரல், வாழியர்! - ஐய! - எம் தெருவே.

-ஒக்கூர் மாசாத்தியார்

320. கயலும் செயலும்

பாணன் ஒருவன். ஆடல் மகள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டான் ஒரு செல்வனே. அறிந்தாள் மனைவி. கோபம் கொண்டாள்.

சில நாட்கள் சென்றன. காதலன் வீடு திரும்பின்ை. மற் றொரு பாணனை மனைவியிடத்தே தூது விடுகிருன். அப்போது அந்த மனத் தலைவி சொல்கிருள்:

“கொக்கு என்ன செய்யும் கெண்டை மீனக் கவ்வும். அதன் பிடியிலிருந்து தப்பும் சில, அவ்விதம் தப்பிய மீன் நீரிலே முகிழ்த்து எழும்போது என்ன கானும் தாமரை மொட்டைப் பார்க்கும். அதைப் பார்த்து அஞ்சும். கொக்கின் மூக்கோ ? என்று.

அந்த மாதிரி நானும் அஞ்சுகிறேன். பாணன் ஒருவன்