பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 கு று ங் தொ ைக க்

பொழில் இருக்கிறது. அங்கே எவருமிரார். குருகுகள்தான் இருக்கும். “தலைக்குக் களிமண் தேய்த்து முழுகுவதற்காக நாங்கள் அங்கே வருவோம்” என்கிருள் தோழி. எதற்காக யுேம் அங்கே வரலாம்” என்பதற்காகக் குறிப்பாகச் சொல்கிருள். “சோலையிலே எவரும் இரார். இன்பமாகப் பேசலாம்” என்று அறிவிக்கிருள். யாரிடம் ? காதல் கொண்ட காளையிடம்.

ஊர்க்கும் அணித்தே, பொய்கை; பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே, சிறு கான்யாறே : இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால், பொழிலே , யாம் எம் கூழைக்கு எருமணம் கொணர்கம் சேறும் ; ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே.

-மாதீர்த்தன்

323. ‘உன்னைக் காட்டுப் பூனை தின்ன !

நீண்டநாள் பிரிந்திருந்தாள் காதலன. எப்பொழுது வரு வானே ?’ என்று ஏங்கிக் கிடந்தாள்.

காதலன் வந்துவிட்டான். ஆனந்தம் ஆனந்தம் 1 இரவு முழுதும் இன்பமாகக் கழித்தாள். துயின்றாள். பொழுது புலர்ந் தது. கோழி கூவிற்று. தூக்கம் கலந்தாள். விழித்துக் கொண்டு விட்டாள். காதலனுடன் இருந்த படுக்கை விட்டு வந்தாள்.

ஒரே கோபம் அவளுக்கு. அந்தக் கோழியின்மீது ஏன் ? அவளே எழுப்பிவிட்டது அல்லவா?

கோழியே! நீ நாசமாய் போக! உன்னைக் காட்டுப் பூனை தின்ன” என்று சபித்தாள். குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகு செந் நெற்றிக் கணம்கொள் சேவல் 1. நள்ளிருள் யாமத்து இல் எவி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்குஇரை ஆகி, கடு கவைப் படீஇயரோ, நீயே - நெடு நீர்