பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட் சி க ள் 323

கடத்திக்கொண்டே போகிருன். அதை நினைத்தால் அவளுக்கு வருத்தம் தோன்றுகிறது; தோள் நெகிழ்கிறது ; வளை கழன்று விடுகிறது. அப்போது தோழி சொல்கிருள்:

“மாரிக் காலத்து ஆம்பல் போன்ற கொக்கு எங்கே கம்மைப் பிடித்துக் கொள்ளுமோ என்று அஞ்சுகிறது கண்டு. அஞ்சி என்ன செய்கிறது : தாழை வேரின் அடியிலே புகுந்து கொள்கிறது. அத்தகைய கடல் நாடன் வராவிட்டாலும் பாதகமில்லை. வருத் தத்தை சகித்துக்கொள்ளாமல் வளை நெகிழ்கிறதே! ஊரார் அறிந்து கொள்வாரே என்று அஞ்சாதே. கொஞ்சம் சிறிய வளை களும் உண்டு. அணிந்துகொள்ளலாம்.’

மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர் கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன் வாராது அமையினும் அமைக ! சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

-குன்றிப்ஞர்

346. ம ைர க் க | ய ர் ம க ள்

கடற்கரையிலே உள்ளதோர் ஊர். அந்த ஊரிலே ஒரு பெரிய மரைக்காயர் : பெரும் செல்வர். அரண்மனை போன்ற விடு. ஆள் கட்டு. தினமும் நூறு பேர் வீட்டிலே சாப்பாடு: இப்படி வாழ்கிறார். அந்த வீட்டிலே வந்து சாப்பிடுவான் ஒர் இகளஞன்.

மாலை வந்துவிட்டது. வாயில் காப்போர் வாயிற் கதவைச் சாத்துகின்றனர்.

சாப்பிட வருகிறவர் எல்லாரும் வரலாம்’ என்கின்றனர். பிறகு எவராவது தெருவில் கிற்கின்றனரோ என்று பார்க் கின்றனர்.

வாயிற் கதவு தாளிடப்படுகிறது.