பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ச ட் சி க ள் 35 1

மன்னிக் கழிக’ என்றேனே; அன்னே! ஆசு ஆகு எங்தை யாண்டு உளன்கொல்லோ? கருங் கால் வெண் குருகு மேயும் - பெருங் குளம் ஆயிற்று, என் இடைமுலே நிறைந்தே.

-நன்ஞகையார்

389. ஒருநாளும் சகியேன்!

கடற்கரையிலே உள்ள சோலையிலே அவளைக் கண்டான். இன்புற்றான் ; மகிழ்ந்தான். பின் பலநாள் அப்படி. சிலநாள் வறிதே கழிவதும் உண்டு. அந் நாளில் வருந்துகிருள் அவள்:

‘ஒருநாள் பார்க்காவிட்டாலும் தாங்க முடியவில்லையே. பல நாள் வாட்டுதே துன்பம்’ என்கிருள்.

துணைத்த கோதைப் பணைப் பெருங் தோளினர் கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த சிறு மனப் புணர்ந்த நட்பே- தோழி!ஒரு நாள் துறைவன் துறப்பின், பல் நாள் வரூஉம் இன்னமைத்தே.

390. குறும்பூர் ஆரவாரம் ; }

வில் போரில் வல்லவர் விச்சியர். அவர் தம் தலைவன் சண்டை செய்தான். அப்போது குறும்பூர் மக்கள் பெருத்த ஆர வாரம் செய்தனர்.

அந்த மாதிரி ஒரு சிற்றுார் மக்கள் வம்பு பேசினர். ஏன்? அவ ளுக்கும் அவனுக்கும் காதல்!

அப்போது தோழி சொல்கிருள்:

‘வம்பு கண்டு அஞ்சாதே! உன் காதலன் உன்னுடன் பழகிய நாட்கள் சிலவே. எனினும் வம்பு பெரிதாயிற்று’ என்கிருள்.