பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன் னுரை

இப்போது தமிழ் நாட்டிலே என்ன காண்கிருேம்? வேகம் காண்கிருேம் ; ஆர்வம் காண்கிருேம். து டி து டி ப் புக் காண்கிருேம்.

வேகம் எதற்கு ஆர்வம் எதற்கு துடி துடிப்பு எதற்கு? எல்லாம் ஒன்றனுக்கே. அந்த ஒன்று எது ? அதுவே தமிழ்; தமிழ்:

தமிழ் மொழி வளர்ப்பிலே வேகம். தமிழ் மொழி வளர்ப்பிலே ஆர்வம். தமிழ் மொழி வளர்ப்பிலே துடி துடிப்பு.

வேகமும், ஆர்வமும், துடி துடிப்பும் என் செய்கின்றன ? உந்துகின்றுன; முந்துகின்றன. எதற்கு ? செயல் புரிவதற்கு.

புதிய புதிய எழுத்தாளர்கள் தோன்றுகிறார்கள்; தோன்றிக் கொண்டே யிருக்கிறார்கள்.

புத்தகங்கள் வெளிவருகின்றன ; வேகமாக வெளிவருகின் றன ; புதிய முறையிலே வருகின்றன ; கண்ணேக் கவரும் வகையில் வருகின்றன.

‘அழகு பெற அடுக்கி விற்பதற்கு ஏற்றவை ஆங்கிலப் புத்த கங்களே’ என்று கருதிய விற்பனை கிலேயங்கள் எல்லாம் என்ன செய்கின்றன : த மி ழ் ப் புத்தகங்களுக்கே முதல் இடம் கொடுக்கின்றன.

தமிழ்ப் புத்தகம் என்று சொன்னல் வாங்குவோர் தொகை அரிதாயிருந்த காலம் ஒன்றுண்டு. ஆனால் இன்றாே ? கிலேமை வேறு.

தமிழ்ப் புத்தகங்கள் ஆயிரக் கணக்கில் செலவாகின்றன ; பல ஆயிரம் புத்தகங்கள் விற்பனையாகின்றன. வாங்குவோர் தொகை பெருகிவிட்டது.