பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-62 கு று ங் .ெ த ைக க்

‘சிறிய கிளே. அதிலே பெரிய பலா. அப்படியே பழுத்துத் தொங்கும்’

தொங்குமோ ?”

‘தொங்கும் ; தொங்கும்’

‘எவ்வளவு நாள் ?’’

“கொஞ்ச நாள் தான். பழம் பழுத்துக் கனம் ஏறிப்போல்ை அற்றுக் கீழே விழுந்து விடும்’

அந்த மாதிரி ?”

‘அந்த மாதிரிதான் உனது காதலியும்!”

எப்படி ??? .

“காதல் என்பது கனிந்து இருக்கிறது, கொம்புப் பலா மாதிரி. அவளது உயிரிலே தொங்குகிறது காதல் எனும் பலா’’

“கனம் தாங்குமா ?”

‘தாங்காது. நீண்ட நாள் தாங்காது’

எனவே ?’’

‘விரைவில் வா, வரைந்து செல்”

வேரல் வேலி வேர் கோள் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகுமதி ! யார் அஃது அறிந்திசினேரே ! சாரல் சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கி யாங்கு இவள் உயிர், தவச்சிறிது; காம்மோ பெரிதே.

-கபிலர்

37. ங் ைக யு ம் நா ைர யு ம்

‘'நான் என்னடி செய்வேன் தோழி ?”

‘ஏன் g

‘இன்னும் வரவில்லையே!” ‘என்னவோ தெரியவில்லையே!” வராமலே இருந்து விட்டால் நான் என்னடி செய்வேன் !’ :இவன் என்னைத் தொட்டதற்கு ஏதடி சாட்சி !’

எதுவுமில்லையோ !”