பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கு று ங் தொ ைக க்

‘கோழியிருக்கிறது. முட்டை யிடுகிறது. முட்டையை அப் படியே விட்டுவிட்டால்...... அது குஞ்சாகி விடுமா ? கரு வளருமா? வளராது’

கோழி அடை காக்கிற மாதிரி எப்போதும் உன் காதலன் அடை காக்க வேண்டும் என்கிருயா ?”

‘இல்லாவிட்டால் காதல் எப்படி வளரும்; பலன் தரும் ?” ‘இது தெரியாமல் பேசுகிறார்கள்!”

யாவதும் அறிகிலர், கழறுவோரே தாய் இல் முட்டை போல, உட்கிடந்து சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே ? யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே.

-கிள்ளிமங்கலங் கிழார்

63. ஆங்தை அலறும்; அணங்கு அஞ்சும்

“இனிமேல் இந்த இரவு நேரத்திலே வரவேண்டாம் என்று சொல்லிவிடு’

    • u IIrifL-Lb Q.3-maija)?**
  • அவரிடம்தான்’

‘எவரிடம்? உன் காதலரிடமா?”

-, * *

‘ஆம்

‘ஏன் அப்படி?”

‘எனக்கு ரொம்ப பயமாயிருக்கு”

ஏன் ?”

“ஆந்தை அலறினல் அஞ்சுகிறேன்’

    • b**

‘ஆண்குரங்கு தாவினல் அச்சம்’

  • b**

‘இரவு நேரத்திலே பயங்கரமான அந்த மலேச்சாரல் வழியே வந்து போகிறார். போகும்போது அவர் பின்னே செல்கிறது