பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g

அப்பெண்ணின் உள்ளம் பெரு ந் துய உற்றது. மகளிர்க்கு மாண்பளிக்கும் அருங்குணங்களுள் நான் தலையாயது; நங்கையர்க்கு அழகு தருவது நாண். தற்குல மகளிர்க்குத் தாயினும் சிறந்த தனிச் சிறப்புடையது நான். உயர்குடிப் பிறந்தோரால் தம் உயிரினும் சிறந்ததாக மதிக் கப் பெறும் மாண்புடையது நான்; அத்தகைய 5 8 இழந்து உயிர் வாழ்தல் நற்குடிமகளிர்க்கு இயலாது; நாணின் பெருமை குறித்து வழங்கப் பெறும் இப்பாராட்டுரைகளே நன்கு உணர்ந்தவள். அவள்; அதனல் தோழி கூறியன. கேட்டுக் கலங்கினுள். உற்றாரும் உறவினரும் அறியா வண்ணம், தான் காதலிக்கும் ஒருவன் பின் ஒடி விடுதல் நானுடைய மகளிர்க்கு அழகல்லவே. அவ்வாறு ஒடக்கரு தும் அன்றே, நான் அவரைவிட்டு அகன்று விடுமே; என் நியுைம் அது தானே? நாண் என்னேயும் கைவிட்டு விடுமோ? நாண் அற்ற மகளிரும் மகளிரோ? அந்தோ! நானே நான் எவ்வாறு இழப்பேன் இழந்து எவ்வாறு உயிர் கொண்டு வாழ்வேன்?” என்றெல்லாம் எண்ணி எண்ணி ஏங்கிள்ை.

சிறிது நாழிகை கழிந்தது; சிந்தனை வேறு திக்கில் சென்றது. “நாணக் காத்தற் பொருட்டு, இன்று வீட்டை விட்டு வெளியேற மறுத்தால், மனம் விரும்பும் மணத்தைப் பெறுதல் இயலாது தாயும் தந்தையும் தாம் விரும்பும் ஒரு வனுக்கு என்னை மணம் செய்து கொடுத்து விடுவர். அந் நின் உண்டாயின் என் காதல் என்னும்? என் கற்புதான் என்னும்? நாண் உயிரினும் சிறந்ததே ஆளுல் கற்பு உயிரேயன்றாே நான் இழந்து வாழ்தலும் இயலும்; ஆனல் கற்பிழந்த காரி கையர்க்கு வாழ்வு இல்லையே; ஆகவே, என் கற்பு வாழ வேண்டின், நாணேசு கைவிடுதல் வேண்டும்’ என்ற முடி விற்குக் கொண்டுசென்றது அவள் சிந்தன.

ராணக் கைவிடவேண்டும் என்ற முடிவு, மீண்டும் அவளை நடுங்கப் பண்ணிற்று; அந்நாணின்பால் அவளுக்கு இரக்கம் பிறந்தது. “நாணக் கைவிடும் இந்நில எதளுல்