பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

விரும்பும் உயிர்த்தோழி’ எனக் கூருமல் கூறி உறுதி செய் தன; அதனல், அவளே இவள்தோழி, என்பதைத்தெளிவாக உணர்ந்துகொண்டான்; காதலியின் தோழியைக் கண்டு கொண்டதைத் தன் காதல் நிறைவேறின ற்போல் கருதி மகிழ்ந்தான்; இனி, அவள் துணையால், இவளைப் பெற்று மகிழ்வேன்’ எனும் மனநிறைவோடு மனை புகுந்தான்.

“தலைப்புணைக் கொளினே, தலைப்புணைக் கொள்ளும்; கடைப்புணைக் கொளினே, கடைப்புணைக் கொள்ளும் புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின், ஆண்டும் வருகுவள் போலும், மாண்ட மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிங் உறழும் கொழுங்கடை மழைக்கண் துளிதலைத் தலைஇய தளிர் அன்ளுேளே’ a

தோழி ஒரு பேதை:

காதலியின் தோழியை அறிந்துகொண்ட அவன் அவளை ஒருநாள் தனிமையில் கண்டு, தான் காதலியைக் கண்டது, அவளும் தானும் காதல் கொண்டது ஆய நிகழ்ச்சிகளை அறிவித்து, அக்காதல் வளரத் துணைபுரியுமாறு வேண் டிஞன்; அவள், அவர் காதல் உறவை, அவன் கூருமுன்பே அறிவாளாயினும், அதைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. அவர்கள் காதல் எத்தகையது? உள்ளன்பு வாய்ந்ததா? அல்லது ஒரு சில காளில் அழிந்து போகக் கூடியதா என்பதை

2 குறுந்கொகை: 2221 சிறைக்குடி ஆந்தையார்.

புணை: தெப்பம்; தலைப்புணை, தெப்பத்தின் தலைப் பக்கம் கொளினே! பற்றிக் கொண்டால்; கடைப்புணை: தெப்பத்தின் கடைப் பகுதி, ஒழுகின்: அடித்துச் செல்லப் பட்டால்; மாண்ட மாண்புமிக்க; மாரிப்பித்திகம்: மாரிக் காலத்தே மலரும் பிச்சிமலர்; நீர்வார்: நீர் ஒழுகும்; கொழு முகை பெரிய அரும்பு, செவ்வெரின் உறழும் சிவந்த மேற் புறத்தை ஒக்கும்; தலைத் தலைஇய தன்னிடத்தே பெற்ற தளிர் அன்ளுேள் மாந்தளிரை ஒத்தவள், - -