பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 குற்றம் பார்க்கில் படங்களில் புகை வியாபித்திருந்தது - தலைமை ஆசிரியரின் சிகரெட் புகை, அலை அலையாகச் சூழ்ந்தது அண்ணாவி துடித்துப் போனார் கேட்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர் போல் சிறிது நேரம் தனக்குத்தானே அவகாசத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர், "தம்பி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. ஒரு பள்ளிக்கூடம், பழனியைவிட, சிதம்பரத்தைவிட புனிதமானது அதில் மாட்டப்பட்டிருக்கும் தெய்வப் படங்கள், அதைவிடப் புனிதமானது இங்கே சிகரெட் பிடிக்கிறது நல்லதில்லை" என்றார். தலைமையாசிரியர் அண்ணாவிக்குப் பதிலளிப்பதுபோல், இப்போது சுருள் சுருளாகப் புகைவிட்டு, சிகரெட் சர்க்கஸ்' நடத்தினார். "நீயும் ஒரு வாத்தியாராடா" என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை, அண்ணாவி அடக்கிக் கொண்டார் அண்ணாவியின் மெளனம், தலைமை ஆசிரியர்க்கு ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே, "பூதலிங்கம், உங்க வயசுக்காக நான் பொறுமையாய் இருக்கேன் அவன அந்தப் பாடத்துல போடு இவன இந்தப் பாடத்துல போடுன்னு அதிகப் பிரசங்கித்தனமா பேசினதைக் கூடப் பொறுத்துக் கிட்டேன் அப்படிப் பொறுத்ததினாலே இன்னைக்கு என் பெர்ஸனல் மேட்டர்ல தலையிடுறீங்க நான் தலைமையாசிரியர் பி. ஏ , பி டி படிச்ச டபுள் கிராஜுவேட் லோயர் கிரேட்ல இருந்து வரல நிர்வாகத்தை எப்படி நடத்தனும், எப்படி எப்படி என் அறைக்குள்ளே நடந்துக்கணுமின்னு எல்லாம் எனக்குத் தெரியும். யூ கேன் கோ நவ் " அண்ணாவி, தள்ளாடிக் கொண்டே வெளியே வந்தார் கம்பீரமாக நின்று பழக்கப்பட்ட அவர், மேனி குலைந்து போனார் மனதுக்குள் புனிதமாக இருந்த சேவையின் நினைவுகள் அவரைச் சுட்டன "எனக்குத் தெரியும்" என்று தலைமையாசிரியர் எவ்வளவு அலட்சியமாகக் கூறிவிட்டார் அண்ணாவி கூடத்தான் கலெக்டரைப் பார்ப்பது சம்பந்தமாகவும், ராமனின் காதல் விவகாரத்திலும்"எனக்குத் தெரியும்" என்று சொல்லியிருக்கிறார். ஒரே வார்த்தையில் இரண்டு அர்த்தங்களா? இருவர் பயன்படுத்திய ஒரே வார்த்தையில் எவ்வளவு எதிரும் புதிருமான நோக்கங்கள்! அந்த மனிதர்களால் ஒரே வார்த்தை கூட இரட்டை வேடம் போட்டுவிட்டதே!