பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு.-சமுத்திரம் 4J, ஈரமில்லை. "உன் கணவரும் கடைசியில்..... நான் அவரை ஜென்டில்மேனாக நினைத்தேன்..." - "அப்பா அவரை ஒன்றும் சொல்லாதீர்கள். நீங்களும் எல்லாப் பிள்ளைகளையும் ஒரே மாதிரியாகப் பாவித்திருக்கணும்." "ஆகக்கூடி, உங்களுக்கு இரண்டாயிரம் கூடுதலாக வேண்டும் என்பதைவிட, சாந்திக்கு இரண்டாயிரம் குறைவாகக் கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம், இல்லையா?" என்று சொல்லிவிட்டு நெட்டுயிர்த்தார் சிவராமன். "ஐயையோ, நான் அப்படி நினைக்கவில்லை. சாந்தி என் தங்கை. ஆனால், ஊர் உலகத்தையும் பார்க்க வேண்டியிருக்கேன்னு, அங்கே நடந்ததை ஒளிவு, மறைவு இல்லாமல் சொன்னேன். ஏற்கெனவே இளக்காரமாக நினைக்கும் மாமியாரிடம், தலைக் குனிவாக இருக்குமேன்னு நினைச்சிச் சொன்னேன்." "நீ தலைகுனிய வேண்டியதில்லை அம்மா அதற்கென்றே, ஆண்டவன் ஒருவனை ஸ்பெஷலாகப் படைத்திருக்கிறான்." ஒட்டுக்கேட்டே பழக்கப்பட்ட ராஜம், வெளியே வந்து. "சாந்திக்கு என்ன குறையாம்? பேசாமல் எட்டாயிரம் ரூபாய்க்கு நகை போட்டால் போதும்" என்று நியாயம் வழங்கினாள் வாக்குத் தவறாத சிவராமனுக்கு, வார்த்தை வரவில்லை. மருமகள் சொல்வதை விரும்பினாலும், விரும்பா விட்டாலும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். மகளிடம் நிலைமையை விளக்கினால், 'பைல் பழையபடி மருமகளிடம்தான் வரும். "உங்க மகளுக்கு, உங்க இஷடப்படி நகை போட்டால் போதும்" என்று ராஜத்தின் அப்பாவிடம் அவர் சொன்னது பழைய கதை. "இன்னும் பெரிய இடத்தில் பார்த்திருக்கலாமே" என்று சொன்ன உறவினர்களைத் துச் சமாகத் தள்ளிவிட்டு, இவளை மருமகளாக்கியது ஒரு பிரசுரமாகாத கதை. அதை அந்த எழுத்தாளன் மட்டும்தான் நினைவுபடுத்திக் கொள்ளலாம். பெரும்பான்மை, மருமக்ள் கட்சியை ஆதரிப்பது அவருக்குத் தெரிந்து விட்டதால், அதை ஏற்றுக் கொண்டார்; ஏற்றுத்தான் ஆகவேண்டும். டில்லி மகள், மன்னியின் கட்சிக்கு ஒட்டுப்போட்டவள் போல, தன்னுடைய கன்களில் பிரகாசத்தைக் காட்டினாள். "உன் கணவருக்கு எழுதும்மா! 'சாந்திக்குப் பத்தாயிரம் நகை