பக்கம்:குற்றால வளம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குற்றால வளம்

குற்றாலம் என்பது மங்கலப் பாண்டி வள காட்டின்கண் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஓர் இயற்கை நிறை சிற்றூர். ஊர் சிறிதே யெனினும் மக்கட்கு அது கரும் நல்லின்பத்தைப் பெரும் பேரூரும் தாராது. அவ்வூருக்கு அரணாகயாண்டும் மலிந்து கிடப்பது மலையேயாகும். அம்மலை நமது நாட்டில் சில்லிடங்களில் இருக்கும் வறண்டமலை போன்றதன்று. இயற்கை வளங்கள் எல்லாவற்றையும் அம் மலை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறது. மேற்குப் பெருமலைத் தொடரின் பகுதியைச் சேர்ந்தது அம்மலை. குற்றாலத்தை வளமுடைப்பதியாக ஆக்கியது அம்மலையேயன்றிப் பிறிதென்? நீண்ட பல துரங்களினின்றும் தங்கள் காரியங்களை யெல்லாம் விடுத்துப் பலப்பல மக்கள் திங்கட்கணக்காக ஆண்டுவந்துறைகின்றார் என்பதொன்றே அப் பெருமலையின் வளத்தை வழுத்தாவோ?


வளம் வளம் என வழுத்துதல் கண்டு, அது பொருள் தெரிந்துகொள்ள முடியாத சொல்லென எவரும் மயங்க வேண்டுவதின்று. வளம் என்பதற்கு வருவாய், அழகு, செழுமை முதலிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/10&oldid=1301347" இலிருந்து மீள்விக்கப்பட்டது