பக்கம்:குற்றால வளம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றால வளம்

109

 மையேயன்றோ? இவன் பிறர் புகழ வாழ வேண்டுமென்ற அவாவினாலேயே இவ்வாறு செய்கிறான். இப்புன்செயலை உலகம் கடியுமானால் இவன் இது செய்ய அஞ்சுவான். எவனும் பொய் கூறமாட்டான். உலகில் அறம் வளரும்; மறந்தேயும். நுணுகி ஆயுங்கால் கெடுவினை செய்யத் தூண்டுவது மடமையேயாகும்,


பெரும்பாலாகத் தன்னை எல்லோரும் மதிக்க வேண்டுமென்பதற்காகவே எல்லாக் தீமைகளையும் புரிகின்றார் பலர். இது மடமையே. தன்னை அறவோர் மதிக்க வேண்டுமானால் செய்ய வேண்டுவது அறமேயன்றி மறமன்று. எவரிடத்தும் அவர் விரும்பியவாறு அவர் மனத்திற்கிசையப் பேசினாற்றான் அவர் தன்னை மதிப்பார் எண்றெண்ணி அங்ஙனமே செய்கின்றார். இது அறியாமை! அறியாமை!! உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயம் இருக்கும். எல்லோர்க்கும் இசைய ஒருவன் எப்படி நடக்கமுடியும்? அன்றி எவர் எதைக் கூறினபோதினும் அவர் அதிகாரத்திற்கோ ஆக்கத்திற்கோ பிறவற்றிற்கோ அஞ்சி அவர் கூறியது எதுவாயினும் ஆம் போடுதல் எவ்வளவு பெரிய அறியாமை, இந்நிலையுள்ளார் நிறைந்த நாடு எங்ஙனம் விடுதலை பெறப்போகிறது?


தனக்கென ஒரு கொள்கையில்லாதார் பெருமடையராவார். ஒன்றிலும் தனக்கு ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/118&oldid=1343552" இலிருந்து மீள்விக்கப்பட்டது