பக்கம்:குற்றால வளம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

மலைநாடு

 விளையாடுகின்ற கருமேகங்களைக் கொண்டிலங்கும் காட்சி கண்களைவிட்டகலாது. அம்மலைகளைப் பிளந்து மக்களும் ஊர்திகளும் வழிக் கொள்தற்கு, வெண்கற் பொடிகளால் செப்பனிடப்பட்ட பாட்டையுளது. மலை உச்சிகளின்றும் இடங்கள்தோறும் நீர் வீழ்ச்சிகள் பல வீழ்கின்றன. பச்சை நிறம் வாய்ந்த மலைகளினின்றும் வெண்முத்துச் சரங்களைக் கோத்துத் தொங்கவிடப் பட்டனபோல், அருவிகள் தூங்கும் அழகு பெரும் பேரழகாக இருக்கின்றது.மழை பொழிவதிலும் குறைவில்லை எனவே மலைநாடு வளமனைத்தும் உடைத்தாயிருக்கின்றது என்று வழுத்துதல் சிறிதும் வழுவின்று.


மலைநாட்டின் தலைநகராகிய திருவனந்தபுரத்தில் இந்நாள் கல்வி பெரிதும் கவனிக்கப் படுகிறது. திருவனந்தபுரத்தில் கல்விச்சாலைகள் மிக அதிகம். பெண்கள் கற்பதற்கும் எராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிக்கு மாணாக்கர் செல்ல வேண்டிய காலத்தில் தெருவில் பார்த்தால் ஊர் முழுமையும் எந்த இடத்தில் நோக்கிய போதிலும், ஆண்களும் பெண்களும் புத்தகமேந்திய கையினராய் நிரலே சென்று கொண்டிருக்கக் காணலாம். இவர்களுள் பெண்மக்கள் தொகை ஆண்மக்கள் எண்ணினின்றும் சிறிதும் குறைவாக இராது. சிறிய பெண்கள் முதல் பெரிய பெண்கள் வரைப் பெண்கள் பெரிதும் கல்வியில் முன்னேறி வருகின்றனர். இந்நாட்டில் கண்ட காட்சிகளுளெல்லாம் தலையாய இன்பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/125&oldid=1343992" இலிருந்து மீள்விக்கப்பட்டது