பக்கம்:குற்றால வளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

நல்லன நாடல்

 யாவர். " புராணங்கள் நடந்தவைகளைக் கூறும் பனுவல்கள் அன்று; அவை கட்டுக் கதைகளே" என்ற உண்மையை அறிந்துகொள்வரேல் அவைகளை அப்படியே முற்றும் நம்ப ஒழுக்கநெறி பேணும் எவரும் துணியார்.


புராண்ங்கள் கட்டுக் கதைகள் என்பவற்றிற்குச் சான்றுகள் எண்ணற்றன உள. ஒரே கதையைப்பற்றிப் பல புராணங்கள் ஒன்றுக் கொன்று மாறுபட்டுக்கூறுவதே நல்ல சாட்சி. புராணங்கள் புனை கதைகள் என்பவற்றை உளத்திருத்தி அவைகளைப் படித்தல்வேண்டும். நான் கூறும் ஒன்று கொண்டுமட்டும் அவை புனை கதைகள் என்று துணியுமாறு நான் எவரையும் வற்புறுத்தவில்லை. அவரவரும் ஆராயலாம். அவை புனை கதைகள் என்ற முடிவே கிடைக்க முடியும். அன்றி, தக்க காரணங் கொண்டு மெய்யாக நடந்தவைதாம் என்று கண்டு பிடிக்கப்படுமேல் அக்கூற்றை நானும் ஏற்றுக்கொள்ளத் தயாராக விருக்கிறேன். அவை புனைகதை என்பதிற்சிறிதும் ஐயமில்லை. அன்றி மெய்க்கதையென்று வேண்டுமானுலும் வைத்துப் பேசுவோம். அப்படியிருந்தபோதினும் நல்லன் நாடவேண்டுமே யன்றித் தீயனவற்றை-ஒழுக்கங்கெட்ட கதைகளைக் கொள்ள வேண்டுவதில்லை. எல்லாவற்றினும் மேம்பட்டது ஒழுக்கம். மற்றவை பின்னரே.


ஒரு கருத்தை ஒருவர் கூறுவாரானால் அதை நன்கு சிந்தித்து அது நலனானால் கொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/39&oldid=1295353" இலிருந்து மீள்விக்கப்பட்டது