பக்கம்:குற்றால வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

நல்லன நாடல்


சிறு காரியங்களிலெல்லாம் தவறுசெய்து விடுகின்றார். தாங்களாகவே செய்துகொள்ள வேண்டிய சிலவற்றைப் பிறநாட்டவரைப் பார்த்தேனும் செய்துகொள்கின்றாரில்லை.


நன்மை யாண்டிருந்தாலும் கொள்ள வேண்டுமென்று நான் கூறியபடி பிறநாட்டவரிடம் காணப்படும் நல்லவைகளை யெல்லாம் உடனே கொள்ளுதல் வேண்டும். முதலாவதாக ஒவ்வொன்றையும் குறித்த காலத்தில் செய்வது என்ற ஒன்றை வெளிநாடுகளைப் பார்த்தும் நம்நாடு கற்றுக்கொள்ளாமலிருப்பது பெரிதும் வருந்தத் தக்கது. நான்கு மணிக்குக் கூட்டமென்றால் ஆறு மணிக்கு ஏன் கூடுதல் வேண்டும்? நான்கென்றால் ஆறு ஆறென்றால் எட்டு, எட்டென்றால் பத்தென்பது கூட்வே கூடாது. ஒரு மணி நேரம் ஒருவருக்கு உரையாடக் குறிக்கப்பெற்றிருந்தால் ஒன்றரை இரண்டு மணி நேரங்களும் அதற்குமேலுங் கூடப் பேசுவது கூடாது. காலத்தை அது சரித்தே செல்லுதல் வேண்டும். இன்ன காலத்தில் இன்ன காரியத்தைச் செய்வதென்று வைத்துக்கொள்ளுதல் மிகவும் நல்லது.


அநாவசியமாக எவரையும்பற்றிப் பேசாதிருத்தல்-பெண்களைச் சமமாக நடத்தல்-குழந்கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ளல்-உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ளல்-அழுக்கில்லாத ஆடைகளையே அணிதல்-எல்லாப் பொருள்களையும் பரிசுத்தமாக நாள்தோறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/41&oldid=1295384" இலிருந்து மீள்விக்கப்பட்டது