பக்கம்:குற்றால வளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கல்வியும் அறிவும்



கல்வியும் அறிவும்


கல்வி என்பது கற்றுத் தெரிந்து கொள்வது, அறிவு என்பது இயல்பாக அமைவது. கல்வி என்றால் நூல்களைப் படித்தல் என்று யாரும் எளிதிற் பொருள் கொண்டு விடுகிறார். அது மட்டும் கல்வியாகாது. உலகத்தில் எந்தெந்தப் பொருளை அறிந்துகொள்கிறோமோ அவ்வனைத்தும் கல்வியேயாம். கற்பனவெல்லாம் கல்வியின்பாற் பட்டனவே. நூல் கற்றல் ஒன்றுதான் கல்வியெனக் கோடல் பொருத்த முடைத்தன்று. நூல் கல்லாமல் பல பொருள்களைக் கற்றுக்கொண்டிருப்போர் பலரை இவ்வுலகில் காண்கின்றோம்.


அறிவு பலவகைப்படும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றில் அறிவு மிகுதியாக விருக்கும். ஒவ்வொருவர் மதி ஒவ்வொன்றை அறிவதில் நுட்பமாகச் செல்லும். எதைக் கற்பதாயினும் அறிவு கொண்டுதான் கற்க வேண்டும். எனவே அறிவுக்கும் கல்விக்கும் மிகுதியும் தொடர்பு உண்டு. ஆனால் உலக நீர்மையை நோக்குங்கால் அறிவுக்கும் கல்விக்கும் தொடர்பு இல்லாமலேயே இருக்கின்றது. தொடர்பிருக்கவேண்டிய ஒன்றைத் தொடர் பில்லாததாக உலகில் பல்லோர் ஆக்கிக் கொண்டுவிட்டார். காரணம் , அறிவைக் கையாள்வார் எண் மிகக் குறைவே. பற்பலர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/43&oldid=1301371" இலிருந்து மீள்விக்கப்பட்டது