பக்கம்:குற்றால வளம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

கல்வியும் அறிவும்


யறிவுதான் கல்வியாற் பெறுவது. கல்வி யென்று கூறுமிடத்தெல்லாம் நூல் கற்றிலை மட்டுமன்று என்பதை அன்பர்கள் நினைவில் வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன். செயற்கையறிவை இயற்கையறிவு கொண்டு அறிவதில்லையானால் அவ்வறிவைப் பெறுவதில் நலனுமுண்டு; தீங்குமுண்டு. கிளிப்பிள்ளைக்கும் அவருக்கும் வேறுபாடு இல்லை.


உலகில் நல்லவருமுண்டு; தீயவருமுண்டு. நூல்களுள்ளும் நல்லவை தீயவையுள. இயற்கையறிவை விடுத்துச் செயற்கையறிவை மட்டும் பெறுபவர் நல்லவரைப் படித்தால் நற்செயலிற்றலைப்படுவர்; தீயவரைப் படித்தால் அவர் வழியே போவார். நல்ல நூலைப் படித்தால் நல்ல வழி சேர்வர் தீய நூலைப் படித்தால் அவ் வழி ஆவர். எவ்வெப்பொருளைத் தாங்கள் அறிந்து கொள்கின்றாரோ அவ்வவற்றிற்கு அவர் அடிமையாகிவிடுவர். இது சிறிதும் புனைத்துரையன்று. இன்று கண்கூடாகக் காண்கின்றோம். இவருள்ளும் ஒவ்வொன்றைப் பிடித்துக்கொண்டு அதற்கு மாறான மற்றவற்றை மறுக்கின்றாரே என்றால், அது வழி வழியாக ஒன்றிற்கொண்ட பற்றினாலன்றி இயற்கையறிவை ஆண்டமையாலன்று.


இயற்கையறிவை ஆளாதவர்களேயே மாக்கள் என்று தொல்காப்பியர் முதலிய தொல்லாசிரியர்கள் சொன்னார்கள். தன்மைகொண்டு நோக்குங்கால் அவர் கூற்று முற்றும் உண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குற்றால_வளம்.pdf/45&oldid=1296680" இலிருந்து மீள்விக்கப்பட்டது